ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்திய அரசுக்கு எதிரான தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டம்!

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இந்திய அரசுக்கு எதிரான தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டம்!
#TamilsBoycottGovtOfIndia

காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராகவும், மீத்தேன் அணு உலை, கெய்ல், நீயூட்ரினோ உள்ளிட்ட பேரழிவுத்திட்டங்களை இனப்பகையோடு தமிழ் மண்ணில் திணித்துவருகின்ற இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டம் சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று 06.11.2016 ஞாயிறு இன்று மாலை6.00 மணிக்கு சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் தலைமை தாங்கினார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்ரமணிய சிவா வரவேற்று பேசினார்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப்பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் கூட்டத்தின் நோக்க உரையாற்றினார்.
காவிரி உள்ளிட்ட எந்த உரிமைகளையும் பாதுகாத்துத் தராத இந்திய அரசுக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒத்துழையாமை இயக்கத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அணிதிரள வேண்டும் என்றும் தமிழர்கள் இந்திய அரசுன் இனப்பகையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டிய தற்காப்பு அரசியல் மற்றும் ஒத்துழையாமை இயக்க வேலை திட்டங்களை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை அவர்கள் விளக்க உரையாற்றினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்க தோழர்கள் மட்டுமல்லாது கூட்டத்தில் திரளான இளைஞர்களும் மாணவர்களும் தமிழக உழவர் முன்னணி உழவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு கலந்து கொண்டோர் மட்டுமின்றி கண்ணுற்ற பொதுமக்களும் வணிகர்களும் செய்திகளை குறித்து வரவேற்று ஆதரவளித்தனர்.


தமிழக இளைஞர் முன்னணி தோழர் பா. பிரபாகரன், தமிழக இளைஞர் முன்னணி பொருளாளர் தோழர் சு.சுகன்ராஜ் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர். நிறைவாக தோழர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

#TamilsBoycottGovtOfIndia

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 98408 48594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.