ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“இயற்கை வேளாண் அறிவியலாளர்”அய்யா.கோ.நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் ..!

“இயற்கை வேளாண் அறிவியலாளர்”அய்யா.கோ.நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் ..!
இயற்கை வேளாண் அறிவியலாளரும், பசுமைப் போராளியுமான அய்யா கோ. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கிருட்டிணகிரி மாவட்டம் இராயக்கோட்டையில், இன்று மாலை நடைபெறுகின்றது.

தமிழக உழவர் முன்னணி மற்றும் இளைய தலைமுறை அமைப்பின் சார்பில், இன்று மாலை 3.30 மணியளவில், இராயக்கோட்டை - இ.சி.ஐ பள்ளியில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு முன்னதாக, மாலை 3.00 மணியளவில் அண்ணா சிலையிலிருந்து இ.சி.ஐ பள்ளி வரை நினைவேந்தல் பேரணி நடக்கிறது.

அதன்பின்,அய்யா நம்மாழ்வார் அவர்களின் திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பரிசளிப்பும், சிறு தானியக் கண்காட்சியும் நடைபெறுகிறது.

நிகழ்வில், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளருமான அய்யா கி.வெங்கட்ராமன் அவர்களும், பூவுலகின் நண்பர்கள் - பொறியாளர் திரு. கோ.சுந்தரராசன் அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.

நிகழ்வில், உழவர்களும், தமிழ் மக்களும் திரளாகக் கலந்து கொள்ளும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தொடர்புக்கு:9659360967

செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.