ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சல்லிக்கட்டு தடை நீக்கிட வலியுறுத்தி தஞ்சை வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆவேசம்!

சல்லிக்கட்டு தடை நீக்கிட வலியுறுத்தி தஞ்சை வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆவேசம்!
சல்லிக்கட்டு தடை நீடிக்கக் காரணமாக உள்ளமோடி அரசைக் கண்டித்தும், தடைசெய்யப்பட்ட விலங்குப் பட்டியிலிலிருந்துகாளையை நீக்கிட வலியுறுத்தியும், பன்னாட்டுக் குற்றக் கும்பலான பீட்டாவைவெளியேற்றிட கோரியும், உடனடியாகநடுவணரசு அவசரச் சட்டம் இயற்றிஏறுதழுவலை தமிழ்நாட்டில் அனுமதிக்கவலியுறுத்தியும் இன்று (20.1.2017) காலை 10.30 மணிக்கு தஞ்சை நாஞ்சிக்கோட்டைசாலையிலுள்ள நடுவரணரசின்வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிதமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள்முற்றுகை இட்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்க தஞ்சை மாவட்டசெயலாளர் தோழர் குழ.பால்ராசுதலைமையில் நடந்த முற்றுகைப்போராட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர்கள்தோழர்கள் இராசு. முனியாண்டி, க. காமராசு, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு, தஞ்சை மாநகரச் செயலாளர்தோழர் இலெ. இராமசாமி, மகளிர் ஆயம்நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி, பூதலூர் ஒன்றியச் செயலாளர்தோழர் இராசப்பிரியா, தஞ்சை நகரத் தோழர்சரசுவதி தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட 75 பேர் இம்முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலில், வருமானவரி அலுவலகவளாகத்திற்குள் அனைவரும் உள்ளேபுகுந்து, நுழைவு வாயில் கதவைப் பூட்டினர். அதன்பின் அலுவலக வராந்தாவில் அமர்ந்துமுழக்கங்கள் எழுப்பினர். உள்ளேபணியாற்றிக் கொண்டிருந்த அலுவலர்கள், ஊழியர்கள், பின்வாசல் வழியாக வந்து வேடிக்கை பார்த்தனர்.

“ இந்திய அரசே இனப்பகை அரசே சல்லிக்கட்டு தடை நீக்கு!
தடை செய்யப்பட்ட விலங்குப்பட்டியலிலிருந்து காளையை நீக்கு!”
”மோடி அரசே! சல்லிக்கட்டை அனுமதிக்க அவசரச் சட்டம் உடனே கொண்டுவா!
அதிமுக அரசே! அரைகுறை வேலை செய்யாதே! தில்லிக்குக் கங்காணி ஆகாதே!”
என்ற முழக்கங்களை ஆவேசமாக எழுப்பினர்.

அரைமணி நேரம் கழித்துத் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் திருமகேசு தலைமையில் அதிரடிப்படையினர் வந்தனர்.

முற்றுகை நடத்திய வீரர்களும், வீராங்கனைகளும் அஞ்சாமல் முழக்கமிட்டனர். கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது “எங்கள் தமிழ்நாட்டில் எங்கள் பண்பாடு காக்கப்போராடுகிறோம்! எதற்காகக் கைதாக வேண்டும்? முடியாது என்றனர். காவல்துறையினர் விலகிக் கொண்டனர்.

முற்றுகை தொடர்ந்து நடந்தது. பின்னர் அங்கிருந்து அனைவரும் முழக்கமிட்டு ஊர்வலமாகப் புறப்பட்டு தொடர்வண்டி நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கலைந்தனர்.

#WeDoJallikattu
#SaveJallikattu
#TamilsBoycottGovtOfIndia

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.