இன்று (03.06.2017) தஞ்சையில்... கவிக்கோ அப்துல் ரகுமான் பாவலர் நா. காமராசன் தப்பாட்டக் கலைஞர் ரெங்கராசன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்!
இன்று (03.06.2017) தஞ்சையில்... கவிக்கோ அப்துல் ரகுமான் பாவலர் நா. காமராசன் தப்பாட்டக் கலைஞர் ரெங்கராசன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்!
கவிக்கோ அப்துல் ரகுமான், பாவலர் நா. காமராசன், தப்பாட்டக் கலைஞர் ரெங்கராசன் ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (03.06.2017) மாலை, தஞ்சையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறுகின்றது.
தஞ்சை புது ஆற்றுப்பாலம் சரோஜ் நினைவரங்கில் (எல்.ஐ.சி. ஊழியர் சங்கக் கட்டடம்) மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், முனைவர் இரா. காமராசு, பாவலர் இரா.பெ. வெற்றிச்செல்வி, பொறியாளர் ஜோ. ஜான்கென்னடி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, தஞ்சை அமைப்பாளர் புலவர் கோ. நாகேந்திரன், நாடக நடிகர் விசயகுமார், நாடக வினோத் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.
பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
ஊடகம்: www.kannotam.com
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
ஊடகம்: www.kannotam.com
Leave a Comment