“கதிராமங்கலம் கதறல்” - ஆவணப்படம், குடந்தை போராட்டத்தில் வெளியிடப்பட்டது!

காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி!
அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, “கதிராமங்கலம் கதறல்” என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் உருவாக்கியது.
ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர் - 1965” படத்தை பன்மைவெளி வெளியிட்டது. இதனையடுத்து, காவிரிப்படுகையில் ஓ.என்.ஜி.சி.யின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் முதல் ஆவணப்படமாக இந்தப் படத்தை பன்மைவெளி வெளியிடுகின்றது.
“மொழிப்போர் - 1965” ஆவணப்படத்தின் இயக்குநர் க. அருணபாரதி, “கதிராமங்கலம் கதறல்” படத்தை இயக்கியுள்ளார். கவிஞர் இஞ்சக்காடு பாலச்சந்திரனின் புகழ் பெற்ற “இனி வருமொரு தலைமுறை” பாடலின் தமிழ் வடிவம் படத்தில் இடம்பெற்றுள்ளது. குடந்தை அன்பு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
நேற்று (20.06.2017) மாலை குடந்தையில் கதிராமங்கலம் காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இந்த ஆவணப்படத்தை வெளியிட, கதிராமங்கலம் மக்கள் சார்பாக பெண்ணொருவர் பெற்றுக் கொண்டார்.
ரூபாய் 50 விலையிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படக் குறுந்தகட்டை, அஞ்சலில் பெற விரும்புவோர் ரூ. 80 கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
வங்கிக் கணக்கு விவரம்
வங்கிப் பெயர் : இந்தியன் வங்கி
கணக்குப் பெயர் : K.BALAKUMARAN
கணக்கு எண் : 715139157
கிளை : தியாகராயர் நகர். சென்னை.
IFSCCODE : IDIB000T014
கணக்காளர் கைப்பேசி: 98408 48594
வங்கிக் கணக்கில் தொகை செலுத்தியோர், அதற்கான சான்றோடு - அவர்களது முழுமையான அஞ்சல் முகவரியை, பன்மைவெளி வெளியீட்டகத்தின் முகநூல் பக்கத்தில் தெரிவித்து, குறுந்தகட்டைப் பெறலாம்!

Leave a Comment