தொண்டன் - திரைப்பட திறனாய்வு - தீந்தமிழன்
தொண்டன் - திரைப்பட திறனாய்வு - தீந்தமிழன்
தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து சமூக அக்கறையுடன் திரைப்படங்ககள் இயக்கிவரும் இயக்குநர் சமுத்திரக்கனி, “அப்பா’’ படத்தைத் தொடர்ந்து, “தொண்டன்’’ திரைப்படத்தை எழுதி, இயக்கி, அதில் நடிக்கவும் செய்துகள்ளார்.
இத்திரைப்படத்தில், இலவச அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) ஓட்டுநராக வரும் சமுத்திரக்கனி, அவசர ஊர்தி ஓட்டுநர்ககள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் மனநிலையையும், வாழ்க்கையையும் அவர்களின் உயிர்ம நேயத்தையும் நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டியிருக்கிறார். இதுவரை திரையில் காட்டப்படாத அவர்களின் வாழ்வை நமக்குக் காட்டியதற்கு அவருக்குத் தனிப் பாராட்டுககள்!
கலை, இலக்கியப் படைப்பாளிககள் காலத்தின் வடிவமாக இருக்க வேண்டும். அதுபோல் காலத்தின் வடிவமாக சமகால தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகளான காவிரிச் சிக்கல், உழவர் சிக்கல், மீத்தேன் சிக்கல், ஏறுதழுவல் புரட்சி, பெண் களுக்கு எதிரான பாலியல் கொடு மைககள், சாதிவெறி அரசியல் என பல்வேறு சிக்கல்களை, தனக்கே உரிய தனிச் சிறப்பு வசனங்ககள் வழியே திரைப்படத்தில் கொண்டு வருகிறார் சமுத்திரக்கனி!
“நல்லது செய்தல் என்பது ஒருவகை யான போதை! அந்த போதைக்கு அடிமையாகி விட்டோம் என்றால் தொடர்ந்து செய்யத் தூண்டும்’’ என்ற வசனம் தனிச்சிறப்பானது! மனத்தை ஈர்க்கிறது! ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும், இத்திரைப்படத்தில் காட்சிப் படுத்தியுகள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி.
கதையில் ஒரு காட்சியில், சமுத்திரக்கனியின் தங்கை அர்த்தனாவின் தோழியைக் கல்லூரிக்குச் சென்று கட்டையால் அடிக்க முற்படுகிறார், ஒரு அமைச்சரின் மகன்! அப் போது, “அவன் ஒருத்தன்..நாம எத்தனை பேரு?’’என அர்த்தனா உணர்ச்சியூட்ட, அங்கிருந்த எல்லாப் பெண்களும் இணைந்து அமைச்சர் மகனைத் தாக்கும் காட்சி, பெண்களுக்குத் துணிச்சல் அளிக்கக் கூடியது!
“நீங்ககள் செய்வது ஒருதலைக் காதல் அல்ல, ஒருதலைக் காமம்! புடிச்சவன கல்யாணம் பண்ணாலும் கொல்றீங்க.. புடிக்கலைனு சொன்னாலும் கொல்றீங்க..” என்று பேசி, ஒரே நேரத்தில், ஆணாதிக்கத்தையும் சாதிவெறி அரசியலையும் அம்பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி! தன்னை வளைக்க நினைக்கும் சாதிவெறி அரசியல்வாதியிடம் ஒரே மூச்சில் “அத்தன் கருப்பன்” முதல் “புலிக்குல காளை’’ வரையிலான தொண்ணூறு நாட்டு மாடுகளைப் பட்டியலிட்டு, அண்மையில் நடந்த ஏறுதழுவல் எழுச்சியையும், போராட்டத்தின் இறுதியில் காவல்துறையினர் மாணவர்களை ஒடுக்கியதையும், மீனவர்களின் வீடு களை எரித்ததையும் பேசும் காட்சி, திரைத் துறையில் பலரிடமும் இல்லாத துணிவு சமுத்திரக்கனிக்கு உண்டு என்று பறைசாற்றும் காட்சி!
“இந்த உலகத்துல வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும்” என்று படத்தை முடித்திருப்பதும், சிறப்பானது!
படத்தில் சமுத்திரக்கனி மட்டுமின்றி, சுனைனா, விக்ராந்த், கஞ்சா கருப்பு, வேல. இராமமூர்த்தி எனப் பலரும் தங்ககள் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்திருக்கிறார்ககள். சில நிமிடங்களே வந்தாலும் சூரி, தம்பி இராமையா வரும் காட்சிககள் படத்துக்கு புது வீச்சை அளிக்கின்றன.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. வட தமிழ் நாட்டின் கடலூர், நெய்வேலிப் பகுதிகளை அழகுக் குறையாமல் காட்டியுகள்ளனர் ஒளிப்பதி வாளர்ககள் ஏகாம்பரம், ரிச்சர்ட் எம். நாதன் ஆகியோர்!
சமுத்திரக்கனி சுனைனா காதல் காட்சிககள், செயற்கையானவையாகவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவுமே தெரிகிறது.
திரைக்கதைக்குத் தொடர்பில்லாத பல வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பதாகப் பலர் கூறினாலும், அவை சமூகத்துக்குத் தேவையானவை என்பதால் சமுத்திரக்
கனியையும், அவரது குழுவினரையும் நாம் நிச்சயமாகப் பாராட்டலாம்!
Leave a Comment