“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு!
“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு!
“தமிழ்த்தேசியப் போராளி” ஓவியர் வீரசந்தானம் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, இன்று (31.07.2017) சென்னையில் நடைபெறுகின்றது.
சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை 3 மணி தொடங்கி நடைபெறும் இந்நிகழ்வுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா. நல்லக்கண்ணு தலைமையேற்கிறார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் முன்னிலை வகிக்கிறார்.
உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் ஓவியர் வீரசந்தானம் அவர்களின் படத்தைத் திறந்து வைக்கிறார். இயக்குநர் வ. கவுதமன் வரவேற்பரை வழங்கி, நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார்.
“பாவலர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் திரைப்படப் பாடலாசிரியர்களும், “கலைஞர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களும், “சான்றோர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில் சமூக செயல்பாட்டாளர்களும், “தலைவர்கள் நோக்கில் ஓவியர் வீரசந்தானம்” என்ற தலைப்பில்
பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்களும் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்துகின்றனர்.
இவ் அரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment