ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி உரிமையைக் காக்க உடனே கையெழுத்திடுங்கள்!

காவிரி உரிமையைக் காக்க உடனே கையெழுத்திடுங்கள்!
காவிரி உரிமையைக் காக்க, உச்ச நீதிமன்றத்திற்கு உடனடியாக மனு அனுப்பும் வகையில் கையெழுத்து இயக்கத்தை காவிரி உரிமை மீட்புக் குழு முன்னெடுக்கிறது!
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு, கடந்த 17.08.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சேகர் நாப்தே ஒப்புதல் கொடுத்த செயல், ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனையடுத்து - திருவாரூர் நகருக்கு அரசு விழாவில் கலந்து கொள்ள 19.08.2017 அன்று வந்த முதலமைச்சர் பழனிச்சாமிக்கு, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்திய பிறகு, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், கர்நாடகாவுடன் சமரசப் பேச்சு நடத்தப்போவதாகக் கூறி நம் கூற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவிரி வழக்கில் - தமிழர்களின் பிரிதிநிதியாக வாதிடாமல், கர்நாடகம் மற்றும் இந்திய அரசுத் தரப்போடு இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுக்கும் அளவிற்கு எடப்பாடியார் அரசு விலை போய்விட்டது!
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் தகுதியை (Representative Character) இழந்துவிட்டார்கள்.
எனவே, தமிழ்நாடு சார்பான விவாதம் இல்லாமலே, இந்த வழக்கு விசாரணை நடைபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில், உடனடியாக உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும்படி தமிழ் மக்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக்கொள்கிறது!
அதற்கான படிவம் கீழே அளிக்கப்பட்டுள்ளது:
தமிழ் மக்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு, பிறரையும் கையெழுத்திட வலியுறுத்திட வலியுறுத்தி, நம் உணர்வை உச்ச நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்த இவ்வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் என அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.