ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆவேசத்தை - அறப்போராட்டத்தை வெளிப்படுத்த வெள்ளமென வாருங்கள்...! தஞ்சையில் 06.10.2017 அன்று . . . வஞ்சக வலையறுக்கும் - காவிரிக் காப்பு மாநாடு!

ஆவேசத்தை - அறப்போராட்டத்தை வெளிப்படுத்த வெள்ளமென வாருங்கள்...! தஞ்சையில் 06.10.2017 அன்று . . . வஞ்சக வலையறுக்கும் - காவிரிக் காப்பு மாநாடு!

காவிரியை இழப்பதும் தமிழர்கள் தங்கள் உயிரை இழப்பதும் ஒன்றுதான்!
தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுக்க - இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசும், மோடியின் ஆதரவோடு ஜக்கி வாசுதேவ் போன்றோர்களும் முன்னெடுக்கும் வஞ்சக வலையை அறுக்கும் வகையில், தஞ்சையில் அக்டோபர் 6 அன்று, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், “காவிரிக் காப்பு மாநாடு” நடைபெறுகின்றது.
தஞ்சை - நாஞ்சிக்கோட்டை சாலையில் காவேரி திருமண மண்டபத்தில், 06.10.2017 வெள்ளி மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்திரளான உழவர்களும், உணர்வாளர்களும் பங்கெடுக்கின்றனர்.
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் மாநாட்டிற்குத் தலைமை தாங்குகிறார். தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. ப. செகதீசன் வரவேற்கிறார். மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் தொடக்கவுரையாற்றுகிறார்.
மாநாட்டின் கருத்தரங்கில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், “கனிம வேட்டையிலிருந்து காவிரிப் படுகையைக் காப்பது எப்படி?” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் பொறியாளர் இரொ. பரந்தாமன் “காவிரி இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்ற வழக்கும்” என்ற தலைப்பிலும், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, “கட்டுப்படியான விலையா? இலாப விலையா?” என்ற தலைப்பிலும், சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், “பன்னாட்டு ஆற்றுநீர்த் தீர்வுகளும் காவிரி நீர் மறுப்பும்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் நிறைவரங்கில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் திரு. கோ. ஜெய்சங்கர், வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.வி. ராஜன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வன், மனிதநேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிறைவில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழ பழ. இராசேந்திரன், “கூடிப்பிரியேல்” ஒருங்கிணைப்பாளர் தரு. இரா. பாலமுரளிவர்மன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றனர். தோழர் இலெ. இராமசாமி நன்றி கூறுகிறார்.
மாநாட்டு நிகழ்வுகள், காவிரி உரிமை மீட்புக் குழுவின் முகநூல் பக்கமான Facebook.com/KaveriUrimai தளத்தில், நேரலையில் ஒளிபரப்பாக உள்ளன.
மாநாட்டில், உழவர்களும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kannotam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.