பிப்ரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு - இணையத்தில் “மொழிப்போர் - 1965” - ஆவணப்படம்
பிப்ரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு - இணையத்தில் “மொழிப்போர் - 1965” - ஆவணப்படம்! நாளை இணையத்தில் வெளியாகிறது ..!
பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் தமிழ்த்தேசிய எழுச்சியான மொழிப் போர் குறித்த, தமிழின் முதல் ஆவணப்படமான “மொழிப்போர் - 1965” ஆவணப்படம் இணையளத்தில் வெளியிடப்படவுள்ளது.
1965 மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, 24.01.2016 அன்று, மதுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய “மொழிப்போர் - 50” மாநாட்டில் வெளியான இந்த ஆவணப்படம் இப்போது இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பன்மைவெளி வெளியீட்டகம் தயாரித்த இந்த ஆவணப்படத்தை, தோழர் க. அருணபாரதி உருவாக்கியுள்ளார். இன்பா பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். வெற்றித்தமிழன் ( பாலகுமரன் அறிவன் தமிழ் ), தமிழ்ச்செல்வன், நியாஸ் அகமது ( Niyas Ahmed ) ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் காணொலி இணையப் பக்கமான www.youtube.com/Tamizhdesiyam பக்கத்தில், வரும் 21.02.2018 அன்று இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகின்றது.
ரூபாய் 100 மதிப்புள்ள ஆவணப்படத்தின் HD தர DVD குறுந்தகடு வேண்டுவோர் 9840848594 எண்ணுக்கு அழைக்கவும்! நன்றி!
பன்மைவெளி வெளியீடு
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/panmaiveli
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment