காவிரிக்காகப் போராடும் மாணவர்கள்!
காவிரிக்காகப் போராடும் மாணவர்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தை ஏற்கக் கூடாது ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழக அரசியல் துறை மாணவர்கள் அன்பழகன், கார்த்திக், கார்த்திகேயன் ஆகியோர் கடந்த 10.04.2018 அன்று முதல், பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு கட்டடத்தின் முன் மேற்கொண்டு வரும் இப்போராட்டத்திற்கு மாணவர்களும், உணர்வாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று (11.04.2018) மாலை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன், மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். காவிரி உரிமைப் போராட்டத்தில் தற்போதுள்ள நிலையை விளக்கி அவர்களிடம் உரையாடினார். இயக்குநர் வ. கௌதமன், பச்சைத் தமிழகம் கட்சி செய்தித் தொடர்பாளர் தோழர் யா. அருள்தாஸ், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
Leave a Comment