ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு!
இந்திய அரசு - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனக் கோரி, நேற்று (08.04.2018) காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், பல்லாயிரக்கணக்கான மக்களும் உழவர்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சற்றொப்ப 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மறியலால், வாகனங்கள் பெருமளவில் தேங்கி நின்றது. போராட்டத் தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அயனாவரம் 

அயனாவரத்தில் பகுதியில், தொடர்வண்டி மறியல் போராட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் முன்னெடுத்தனர். தண்டவாளத்தில் அமர்ந்து, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் சில மணிநேரங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதே போல தஞ்சாவூரில் சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரிச் சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. பழனிராசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் காவல்துறையினரால் கைது செய

மன்னார்குடி

இந்திய அரசு - காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடியில் நேற்று (07.04.2018) காலை இந்திய அரசின் அஞ்சலகத்தை உழவர்கள் அதிரடியாக முற்றுகையிட்டனர். தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், திருவாரூர் கலைச்செல்வம் மன்னை இராசசேகரன் அரிகரன்..உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்பினரும், இளைஞர்களும் பங்கேற்று கைதாகினர்.

போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், மன்னார்குடி சுற்றுவட்டார்த்திலுள்ள பரவாக்கோட்டை, ஆவிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, சுந்தரக்கோட்டை, ஆலங்ஙகோட்டை, தளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, மேலத்திருப்பாலக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வடவாற்றுப் பாசன உழவர் அமைப்புகளின் இளைஞர்களும், உழவர்களு பேரணியாகச் சென்று மன்னார்குடி அஞ்சலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டு காவல்துறையினரைத் திணறடித்தனர்.

குடந்தை

குடந்தையில் நேற்று (07.04.2018) சாலையை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டம் நடத்தி முடக்கினர். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பல்வேறு உழவர் அமைப்பினரும், இளைஞர்களும் பங்கேற்று கைதாகினர்.

திருச்சி

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க இந்திய அரசை வலியுறுத்தி நேற்று காலை 10.45 மணிக்கு திருச்சியில் உள்ள"அகில இந்திய வானொலி நிலையம்" காவிரி உரிமை மீட்புக்குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்த காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தவைவர் ம.ப. சின்னத்துரை தலைமையில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொருளாளர் தோழர் அ.ஆனந்தன், மாநகரச் செயலாளர் தோழர்.மூ.த. கவித்துவன், சமூகநீதிப் பேரவைத் தலைவர் அ. இரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சியின் தோழர் இப்ராஹிம்சா ஆகியோருடன் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தஞ்சை

இந்திய அரசு - காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, தஞ்சையில் நேற்று (07.04.2018) காலை இந்திய அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.) அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்டு, பூட்டிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்.ஐ.சி. அலுவலகம் பூட்டப்பட்ட செய்தி அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத் தோழர்கள் அனைவரையும் கைது செய்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் இலட்சுமி அம்மாள், வழக்கறிஞர் சூர்யா செல்வநாயகம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம்

சிதம்பரத்தில் நேற்று (07.04.2018) காலை பெங்களூரு சென்ற தொடர்வண்டி காவிரி உரிமை மீட்புக் குழுவினரால் மறிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத் தோழர்கள் அனைவரும் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக வாழ்வுரமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. மு. முடிவண்ணன், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி, தமிழக ஓடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் தோழர் நாகராஜ், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், த.தே.பே. நகரச் செயலாளர் தோழர் எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த அணியாக, பிற்பகலில், தமிழக உழவர் முன்னணி நடத்திய தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் சோழன் விரைவுத் தொடர்வண்டி மறிக்கப்பட்டு தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சாலியமங்கலம்

சாலியமங்கலத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மருங்குளம்

தஞ்சை வட்டம் - மருங்குளத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் வினோத் - பாலாசி ஒருங்கிணைப்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு கைதாகினர்.

இந்திய அரசே! காவரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!

#IndiaBetraysTamilnadu
#TamilsBoycottGovtOfIndia 
#WeWantCMB
#SaveMotherCauvery


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
www.kannottam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.