விழுப்புரம் மாவட்டம் - தொரவியில் இன்று மாலை சிறப்புப் பொதுக்கூட்டம்! தோழர் பெ. மணியரசன் சிறப்புரை!
விழுப்புரம் மாவட்டம் - தொரவியில் இன்று மாலை சிறப்புப் பொதுக்கூட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரை!
“தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில், விழுப்புரம் மாவட்டம் - தொரவியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (08.04.2018) மாலை சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.
விக்கிரவண்டி அருகிலுள்ள தொரவி கிராமத்தின் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார்.
நிகழ்வின் தொடக்கத்தில், பெண்ணாடம் தென்றல் கலைக் குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சியும், பாகூர் கரிகால்சோழன் வீரவிளையாட்டுக் குழுவிரின் தமிழர் வீரவிளையாட்டுக் கலை நிகழ்வும் நடைபெறுகின்றது.
இதனையடுத்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றுகிறார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா, புதுச்சேரி த.தே.பே. செயலாளர் தோழர் இரா. வேல்சாமி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment