காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக! புதுதில்லியில் சீக்கியர் - தமிழர் பேரணிக்குப் பின் ஐ.நா. அலுவலகத்தில் தலைவர்கள் கோரிக்கை!
காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக! புதுதில்லியில் சீக்கியர் - தமிழர் பேரணிக்குப் பின் ஐ.நா. அலுவலகத்தில் தலைவர்கள் கோரிக்கை!
காசுமீரி தேசிய இன மக்களின் உரிமைகளை ஆதரித்து சீக்கியர்களும் தமிழர்களும் இணைந்து இன்று (26.09.2019) காலை புதுதில்லியில் நடத்தத் திட்டமிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தில்லி காவல்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்தது.
இத்தடையை மீறுவது என்று முடிவு செய்த நிகழ்ச்சிக் குழுவினர் அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவர் திரு. சிம்ரஞ்சித் சிங் மாண் தலைமையில் சீக்கியர் கோயிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு நடுவண் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர்.
ஐநூறுக்கும் மேற்பட்ட சீக்கியர்களும், தில்லி பகுதி நாம் தமிழர் கட்சித் தோழர்கள் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டோரும் பங்கேற்ற இந்த எழுச்சிப் பேரணி, நடுவண் தலைமைச் செயலகத்திற்கு சற்று முன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இப்பேரணியில், “தல் கல்சா” தில்லி தலைவர் திரு. கிரிப்பால் சிங் சீமா, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தில்லி மனித உரிமை அமைப்புத் தலைவர் திரு. ஜக்மோகன், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, நாம் தமிழர் கட்சி தில்லி பொறுப்பாளர்கள் தோழர்கள் செந்தில், செகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமூகத்திற்கான மாணவர்கள் (Students for Society), பஞ்சாப் சீக்கிய இளைஞர்கள் (Sikh Youth of Punjab), அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழு (Committee for the Release of Political Prisoners) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரும், காசுமீரி – நாகாலாந்து தேசிய இன மாணவர்களும் பேரணியில் பங்கு கொண்டனர்.
பிற்பகலில் பேரணியின் முடிவில், தில்லியிலுள்ள ஐ.நா. தகவல் தொடர்பு நடுவத்தில் ஐ.நா. தலைமைச் செயலாளருக்கான மனு அளிக்கப்பட்டது. இதிலும், இந்திய அரசின் அற்பத்தனமான தலையீடு இருந்தது.
முதலில், ஆறு பிரதிநிதிகள் நேரில் வந்து சந்திக்கலாம் என்று அனுமதித்த ஐ.நா. தகவல் நடுவம், திடீரென்று பூட்டப்பட்டிருந்த அலுவலக வாசலுக்கு வெளியில் மனுவைப் பெற்றுக் கொள்ள கீழ்நிலை அலுவலர் ஒருவரை அனுப்பியது.
இதை ஏற்க மறுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ஜக்மோகன், கடுமையாக வாதிட்டார். பேராளர் குழுவை உள்ளே அனுமதிக்கவில்லையென்றால், எல்லோரும் அலுவலக வாயிலிலேயே அமர்ந்து மறியல் செய்வோம் என்று அறிவித்தார். அதன்பிறகு, ஐந்து பேரை அனுமதிப்பது என்று ஏற்றுக் கொண்டார்கள்.
திரு. சிம்ரஞ்சித் சிங் மாண் தலைமையில், “தல் கல்சா” தில்லி தலைவர் திரு. கிரிப்பால் சிங் சீமா, நாம் தமிழர் கட்சித் தலைவர் திரு. சீமான், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், காசுமீர் மனித உரிமைச் செயல்பாட்டாளர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி ஆகியோர் சென்று ஐ.நா. தலைமைச் செயலாளருக்கான மனுவை தில்லி – ஐ.நா. தகவல் நடுவத் தலைமை அதிகாரி திரு. இராஜீவ் சந்திரசேகரிடம் அளித்து மனு குறித்து விளக்கமளித்தனர்.
ஐ.நா. மன்றத்தில் 1948இல் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட அடிப்படையில், காசுமீரி மக்களிடையே அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து வாக்கெடுப்பு (Plebiscite) நடத்த வேண்டுமென்று திரு. சிம்ரஞ்சித் சிங் மாண் எடுத்துரைத்தார்.
அதற்கு மறுப்பு விளக்கமளித்த திரு. இராஜீவ் சந்திரசேகர், “1972இல் இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், இரு நாடுகளும் பேச வேண்டும்” என்றார். இதற்கு மறுப்புத் தெரிவித்த திரு. சிம்ரஞ்சித் சிங் மாண், “வங்கதேச விடுதலையில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு அந்நாடு விடுதலை பெற்றபிறகு, படை வகையிலும் - பொருளியல் வகையிலும் - அரசியல் முனையிலும் பாக்கித்தான் பலவீனப்பட்டிருந்த நேரத்தில் செய்து கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் சமநிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் அல்ல. வார்சா ஒப்பந்தம் போல திணிக்கப்பட்ட ஒப்பந்தம்! வார்சா ஒப்பந்தத்திற்குப் பிறகு செர்மனி, பேராயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. இதேநிலைதான், சிம்லா ஒப்பந்தத்திலும் இருக்கிறது” என்றார்.
அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய தோழர் கி. வெங்கட்ராமன், “இப்பிரச்சினையின் அடிப்படையான காசுமீரிகளையே ஈடுபடுத்தாமல், அவர்கள் கருத்து என்ன என்று கேட்காமல் இரண்டு ஆக்கிரமிப்பாளர்களான இந்தியாவும் பாக்கித்தானும் செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி சர்வதேச நீதி வழங்கும்? ஐ.நா. பறைசாற்றல்கள் (Charters) கூறும் தேசிய இனங்களின் தன்னுரிமை (Right to Self Determination of Nationalities) என்ற அடிப்படையில்தான் ஐ.நா. மன்றம் இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்கள் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தி! உடனடியாக அங்கு நிலவும் நெஞ்சை நெறிக்கும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர – சிறைபட்டுக் கிடக்கிற தலைவர்களையும், இளைஞர்களையும், குழந்தைகளையும் விடுதலை செய்ய – ஊடக சுதந்திரத்தை மீட்க – ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்பதுதான் எங்கள் உடனடிக் கோரிக்கை” என்று விளக்கினார்.
“நாளை (2019 செப்டம்பர் 27), ஐ.நா. பொது அவை கூடுவதால் இன்று (26.09.2019) மாலையே ஐ.நா. தலைமைச் செயலாளருக்கு உங்களுடைய மனு அனுப்பி வைக்கப்படும்” என்று திரு. இராஜீவ் உறுதியளித்தார். “நீங்கள் விளக்கிச் சொன்ன உணர்வுகளையும் ஐ.நா. தலைமையகத்துக்கு தெரிவிப்பேன்” என்று உறுதியளித்தார்.
பல்வேறு வெளிநாட்டு – உள்நாட்டு ஊடகங்கள் இப்பேரணியில் பங்கேற்ற தலைவர்களிடம் நேர்காணல் எடுத்தார்கள். அவற்றுள் அல் ஜசீரா, பி.பி.சி. ஆகிய ஆங்கில ஊடகங்களுக்கு தோழர் கி.வெ. அளித்த நேர்காணல் அதே ஆங்கில வடிவத்தில் சுருக்கமாகத் தரப்படுகிறது.
“Under the enforced silence Jammu and Kashmir is bleeding! The traditional homeland of Kashmiris has been dismembered by the Aryan – Indian Imperial power. Entire Jammu and Kashmir is turned into Concentration camp. Pro freedom leadership of Kashmir is under detention. The Pro Indian leadership is under preventive detention.
Under the banet of Occupied Indian Army, Article 370 and Article 35A of the Indian Constitution were abrogated. The Indian ruling establishment and their camp followers are rejoicing that Jammu and Kashmir is brought into constitutional mainstream. But, the very fundamental rights guaranteed under the Indian constitution is denied to the Kashmiri brethren.
Jammu and Kashmir is turned into one of the worst militarized zones of the world. All the big powers which preach democracy, human rights and peace refuse to see this glaring reality. After a prolonged open genocide, a well planned structural genocide is taking place in Jammu and Kashmir.
More than anybody else we the Tamil People can feel the pain and agony of our Kashmiri brethren. Because our Tamil People of Eelam in Sri Lanka faced similar genocide by the Sinhala Srilankan Army with the active help of Indian Aryan establishment. We lost our Tamil People in all ages to the Genocidal war in 2008 – 2009.
It all happened right at the presence of UNO and other International Human Rights Organizations. Nobody came to their rescue. Even now Structural Genocide is continuing in Sri Lanka against the Tamil People.
Even before that, for the “sin” of defending our great National Language Thamizh – against the imposition of Hindi we lost nearly 400 young people at the hands of Indian Army in 1965.
Day in and Day out we are loosing great many Tamil fisher folk at the hands of Sri Lankan Navy with the active connivance of Indian Government, just because we could not stop snatching of our Katchatheevu, a strategic part of our Tamil homeland in 1974.
In India for a long time the blatant lie that “India is a Nation” is continuously propagated. But, the political and legal reality is that India is not a Nation. It is a Territory ruled by one government.
India, as such is not a traditional homeland for any nationality including Hindi speaking people. Union of India is not a product of any compact. Even the constitution is not defining India as a Nation. It says “India, that is Bharat shall be a Union of States”.
So, defining India as “One Nation” and the Slogan of “One Nation – One Constitution” is out and out a blatant lie – Aryan brand of lie!
There is no difference between Bharathiya Janata Party and the Congress Party in Propagating this Aryan lie. Because BJP and Congress are “identical twins” – that too Aryan twins!
India is a unitary entity with some federal features. Various linguistic nationalities having different traditions are in the Union of India. The traditional homelands of various nationalities were made linguistic states – wrongly meaning provinces.
The Constituent units of various linguistic national states are not having similar or same relationship with the Union of India. Various Articles of the Indian constitution viz, 371, 371-A, 371-B, 371-C, 371-D, 371-E, 371-F, 371-G, 371-H, 371-I, 371-J recognizes different type of special rights to the States of Maharashtra and Gujarat, Nagaland, Assam, Manipur, Telangana, Sikkim, Mizoram, Arunachal Pradesh, Goa and Karnataka – Hyderabad region respectively.
Of all these, Jammu and Kashmir and its Article 370 have a different story. Jammu and Kashmir, on its own will, joined Indian Union under a specific instrument. The “Instrument of Accession” signed between Maharaja Hari singh and Mount Batten dated October 26 – 1947 was for a specific form of temporary relationship with the Union of India under a specific condition. Through this Instrument Kashmiris shared their Sovereignty with India.
It is Jammu and Kashmir which shared some of its Sovereign rights with India, that too for a temporary period, but not the other way round. Until then British India have no sovereignty over Jammu and Kashmir. So it is not India which gave some sovereign powers to Jammu and Kashmir.
When the Constitution of India was drafted this Instrument of Accession gave birth to Article 370. It is an Historical fact that without India agreeing for a separate constitution, a separate flag and other distinct identities to Jammu and Kashmir, Kashmiris joining Indian Union would not have materialized.
In arriving the contents of the Instrument of Accession and drafting of Article 370 (Originally 306A) both Jawaharlal Nehru and Vallabhai Patel were in total agreement. Then Home Minister Vallabhai Patel who used brute force in bringing in various princely states within the Indian Union agreed for Article 370 appreciating the different historical context.
The Propaganda of BJP that ‘Nehru was wrong, Patel was right’ is clear lie!
All through these 70 years of History of Independent India, Jammu and Kashmir had slowly lost its special rights. In abrogating these special powers of Jammu and Kashmir and making mockery of democracy and turning the State into a militarized zone both the Congress party and BJP played their part.
Now, Narendra Modi’s BJP Government gave the final blow – dismembering the Kashmiri homeland into Union territories.
Kashmir, Tamilnadu, Punjab, Nagaland, Mizoram, Arunachal Pradesh, Manipur, Assam, West Bengal and other states are not mere administrative areas but traditional homelands for various nationalities. But, on the contrary, India is an Administrative Territory.
But RSS and BJP which propagate ‘Akand Bharat’ by which want to establish and unquestioned Aryan India, try to dismantle linguistic national states into various administrative units. Jammu and Kashmir is the beginning of that draconian march!
What happened to Jammu and Kashmir today may happen to Tamilnadu or Punjab or other states tomorrow. Definitely this Aryan fascist march cannot be done by peaceful means. In doing so India will be transformed into a Security State.
To Subjugate Jammu and Kashmir, State Terrorism is unleashed ruthlessly. When making Jammu and Kashmir a militarized zone, lakhs of Millitary personnels drawn from various nationalities were deployed there.
For India’s occupation over Kashmir, not only lakhs of Kashmiri people but thousands of Millitary people are loosing their lives. The Tax money collected from various states particularly Tamilnadu, Karnataka, Maharashtra which are contributing more to the exchequer is drained for this occupation. Tamilnadu is contributing nearly one third to the kity.
A Pseudo – patriotic frenzy is whipped up among the Hindi heartland people. A Number of innocent Hindi people celebrate the abrogation of 370 and 35A as though it is their Hindi – India’s victory over defiant Muslim Kashmir.
But all through these period what the Hindi people in Uttarpradesh, Madhya pradesh and other hindi states gained is nothing! Compared to other linguistic national states these hindi people are living in absolute poverty and unemployment.
The poor people from Hindi heartland are migrating to Tamilnadu in search of jobs for lower wages and in human working conditions. There is nothing that they can get from Uttar Pradesh or other Hindi areas. In this process they are under cutting the existing working conditions in Tamilnadu and pose a great threat for the Employment opportunity of our Tamil people.
Behind the smoke of this Aryan – Hindi frenzy the Modi Government is diverting our resources to militarization of various regions of India. Result is that all out Stagnation and economic rescission.
So, it is only the Aryan rulers and some elites who will gain by this ‘Akand Bharat’ programme including the occupation of Jammu and Kashmir.
But, the entire ruling elites not only from BJP but from other political parties supported this draconian move.
What Mr. P. Chidambaram and Gulam Nabi Azad spoke in the Parliament was not the official stand of Congress party. Mrs. Sonia Gandhi and Mr. Rahul Gandhi did not oppose abrogation of 370 at the floor of the house. Instead the Congress working committee condemned only the process of abrogation of Article 370 and 35A, but not the very act of this abrogation. Nearly half of the MPs of Congress party sided with the BJP.
AIADMK openly supported this draconian amendment while the DMK lamented against not consulting the J&K Assembly. But, a good number of Tamil people stood in solidarity with Kashmiris. My Organization – Thamizh Thesiya Periyakkam (Tamil National Movement) participated in an All Party demonstration condemning the abrogation of 370 and dismemberment of Jammu and Kashmir, on the very next day – 06.08.2019.
The Very process of this abrogation of 370 and dismantling the Jammu and Kashmir into centrally administered territories is in itself a constitutional coup.
By adding a new sub clause to Article 367 clandestinely through a presidential order (C.O. 272) the Government of India unconstitutionally empowered itself to effectively abrogate the Article 370 and 35A.
The Entire process was a clear conspiracy. The ruling establishment in Delhi definitely know that even a rank stooge will not agree for outright abrogation of Article 370. So, the BJP first moved out of the Alliance with the Mehbooba Mufti’s PDP. The Government lost majority. As per Article 356 president rule was promulgated.
PDP and National Conference and other political parties of the State smelt the move and reluctantly came together. There was a possibility a new alliance to form a government claiming the Majority in J&K Assembly floor. Immediately the Assembly of J&K was dissolved.
In the Parliament, the BJP under Modi – Amitsha came back with additional majority in 2019 elections.
Now, the path for the draconian move was clear. The “Yes man” Mr. Sathya Pal Malik, the Governor of J&K was ready for any unconstitutional act to dismember Jammu and Kashmir.
Modi – Amitsha combine moved swiftly. First, as mentioned above Article 367 was amended by inserting Sub clause 4. Through this a backdoor was opened in Article 370 (3). Using that backdoor, Article 370 was effectively abrogated. Article 35A Nullified. Even then the Delhi Aryan establishment feared that in the future J&K Assembly may come out with a resoultion against this abrogration. So, very existence of Jammu and Kashmir as a State was closed.
Two Union territories, One with an Assembly, another without assembly were carved out.
Even to the astonishment of the BJP Leadership, the Parliament gave a overwhelming majority to this Unconstitutional move.
Even the parties who opposed the abrogation of Article 370 and dismemberment of Kashmiri homeland, are only questioning the process and against the lockdown.
No doubt that the immediate concern is lifting the lockdown, releasing the political prisoners and young people and children from their detention, restoring media freedom and bringing back normalcy.
But, Kashmir issue is not a Civil rights issue! It is basically a National question. As per the UN Charter, All the Nationalities have inalienable right to Self determination. It is a natural birth right of every nationality as right to life is for every individual. Kashmiris are “A People” having this birth right of Self determination.
The Question of right to Self determination is the Central issue of Kashmir Problem. Without assuring the Right to Self determination for the Kashmiri people, there will not be enduring peace or end to militarization.
Kashmir issue is not a bilateral issue between India and Pakistan. Both India and Pakistan are Occupiers of Kashmiri homeland. It is basically an issue of Kashmiri people which is to be settled with the help of the International community.
In this crucial juncture, the UN and other International bodies failed in their responsibilities.
Making the Kashmiri people leaderless will pave the way for further militarization of not only Jammu and Kashmir but the entire region. India turning into a security state is a threat to every Indian citizens. Immediate brunt will be on Punjab, Haryana and nearby states.
We the Tamil people clearly understand that to Stand with Kashmiri people is not only our humanitarian duty but it is also a pro active duty to defend our traditional homeland – Tamilnadu from future dismemberment and to protect our fundamental rights.
On behalf of our enlightened Tamil people who are aware of Nationality rights, Our Organization – Thamizh Thesiya Periyakkam (Tamil National Movement) firmly stands with Kashmiris.
On behalf of my organization, I appeal to all Kashmiris and other people who are in solidarity with Kashmiris not to loose heart. In this difficult hour we will closely march together.
We can definitely break this deadly silence of our fellow Indian citizens and International community.
“We shall overcome!”
போராட்டக் காணொலி
https://www.facebook.com/tamizhdesiyam/videos/735732656874776
#KashmirNeedsAttention
#WeAreTheVoiceOfKashmir
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment