மும்பையில் நடக்கும் ஈகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் ஐயா பெ. மணியரசன் பங்கேற்கிறார்!
மும்பையில் நடக்கும் ஈகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் ஐயா பெ. மணியரசன் பங்கேற்கிறார்!
தமிழீழத்தை ஆக்கிரமிக்க வந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரி - தொடர்ந்து 12 நாட்கள் அமைதி வழியில் - ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணாப் போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் போராளி - “தியாக தீபம்” ஈகி திலீபனின் 32ஆவது நினைவேந்தல் வரும் 26.09.2019 அன்று மகாராட்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் நடைபெறுகின்றது.
மராத்திய தமிழ் மாணவர் மன்றம், உலகத் தமிழர் பேரமைப்பு, முத்தமிழ் மன்றம், தமிழர் நலவாழ்வு மன்றம், மராத்திய - தமிழ்ச்சங்கம் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.
மும்பை - திலக் நகர் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள டாக்டர் மந்தாகினி பரிகார் சாலை - மகாவீர் ரெசிடென்சியில் வரும் 26.09.2019 - வியாழன் அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. தமிழ்ச்செல்வன் தலைமை தாங்குகிறார். திரு. அ. கணேசன் வரவேற்கிறார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் உரையாற்றுகின்றனர். ஐயா பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார். மராட்டிய - தமிழ்ச்சங்கம் கல்வி அறக்கட்டளை திரு. ப.க. சரவணன் நன்றி கூறுகிறார்.
நிகழ்வில், மராட்டிய மாநிலம் வாழ் தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment