உழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்!
உழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள்
மறைவுக்கு இரங்கல்!
ஐயா பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு.மறைவுக்கு இரங்கல்!
உழவர் இயக்கத் தலைவர் ஐயா புலியூர் நாகராசன் அவர்கள் இன்று (2.7.2020)இயற்கை எய்திய செய்தி அறிந்து மிக மிக வேதனையுறுகிறேன்.தமிழ்மாநில க் காங்கிரசு விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்து மிகவும் சுறுசுறுப்பாக உழவர்கள் உரிமைகளுக்காகவும்,காவிரி உரிமை மீட்புக்காகவும் தொடர்ந்து போராடிவந்தார்.
காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய போராட்டங்களில் பங்கு எடுத்துள்ளார்.காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை இரத்து செய்து, புதிதாக அமைக்கவுள்ள அனைத்திந்திய ஒற்றைத் தீா்ப்பாயத்தில் புதிய வழக்காக விசாரிக்க அனுப்புவது என்று இந்திய அரசு எடுத்த முடிவைக் கை விட வலியுறுத்தி 2017 மார்ச் 28 லிருந்து ஏப்ரல் 15வரை 19 நாள் இரவு,பகலாக என் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் உறுப்பு அமைப்புகள்,தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக நடத்திய காத்திருப்புப் போராட்டத்தைத் தமது இயக்க உழவர்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரித்தார். அதேவேளை த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே வாசன் அவர்களும் தமது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் வந்து வாழ்த்தினார்.
குறைந்த அகவையில் நாகராசன் அவர்கள் உயிரைக் கொடு நோய் பறித்தது கொடுமையிலும் கொடுமை. புலியூர் நாகராசன் அவா்கள் மறைவுக்கு ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இல்லத்தார்க்கும், இயக்கத்தார்க்கும் கனத்த நெஞ்சுடன் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Comment