மதுரையில் 4-ஆம் நாள் பரப்புரை இயக்கம் - கோவை போராட்டம் பற்றிய விளக்கப் பொதுக்கூட்டம்
மதுரையில் 4-ஆம் நாள் பரப்புரை இயக்கம் - விளக்கப் பொதுக்கூட்டம்
தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- 4ஆம் நாள் பரப்புரை இயக்கம் & விளக்கப் பொதுக்கூட்டம் 26.6.2022 ஞாயிற்றுக்கிழமை சம்மட்டிபுரம் சாலையில் நடைபெற்றது.
மாலை 5.00 மணிக்கு சம்மட்டிபுரம் முதன்மைச் சாலை, பொன்மேனி முதன்மைச் சாலைப் பகுதியில் உள்ள கடைகளில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.
அதன்பிறகு மாலை 7.00 மணிக்கு சம்மட்டிபுரம் , எம்.ஜி.ஆர் சிலை அருகில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் மேரி தலைமை வகித்தார்.
தோழர் ஆனந்தன் ( த.தே.பே.பொருளாளர்) தொடக்கவுரையாற்றிட தோழர்கள் தங்கப் பழனி, கரிகாலன், கதிர் நிலவன் ( த.தே.பே.மதுரை மாநகர் செயலாளர்) ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தோழர்கள் மு.கருப்பையா, புருசோத்தமன், அழகர்சாமி, கலைவாணன், தியாகலிங்கம், விடியல் சிவா, நல்ல சிவம், இளமதி, ரேவதி, மகேசு, பாண்டி, இலக்கியன், கவின்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Comment