ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம்,வேலை தமிழர்களுக்கே ! தமிழ்நாடுஅரசே சட்டம் இயற்று!

 தமிழ்நாட்டுத் தொழில், வணிகம்,வேலை தமிழர்களுக்கே ! தமிழ்நாடுஅரசே சட்டம் இயற்று!  இந்திய அரசே வடவரைத் திணிக்காதே ! - தமிழரை வஞ்சிக்காதே ! தஞ்சையில் சிறப்புக் கூட்டம்                                       =========================================================================                           தஞ்சையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்த் தமிழ்நாட்டுத் தொழில், வணிகம்,வேலை தமிழர்களுக்கே ! தமிழ்நாடுஅரசே சட்டம் இயற்று!  இந்திய அரசே வடவரைத் திணிக்காதே ! - தமிழரை வஞ்சிக்காதே !என்ற தலைப்பில் இன்று (16..06.2022)  மாலை தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு சிறப்புப் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு. பேரியக்கத்தின் தஞ்சை மாநகர செயலாளர் இலெ.இராமசாமி தலைமை தாங்கினார். த‌.தே.பே மாவட்டச் செயலாளர், நா.வைகறை , தலைமை செயற்குழுப் உறுப்பினர்கள் பழ‌.இராசேந்திரன்,க.விடுதலைச்சுடர், பூதலூர் ஒன்றியச்செயலாளர் பி.தென்னவன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். நிறைவாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் வெளியார் சிக்கல் ,மேக்கேதாட்டுஅணை சிக்கல், குறித்தும் செறிவான உரைநிகழ்த்தினார்.  இக்கூட்டத்தில் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர்  இராசு.முனியாண்டி, தமிழ் கலை இலக்கியப் பேரவை செயற்குழு உறுப்பினர் பெ.பூங்குன்றன், வள்ளலார் பணியகத்தின் ஒருங்கிணைப்பாளர், ஐயா இராசமாணிக்கம்  காவிரி உரிமை மீட்புப் குழு பொறுப்பாளர் செந்தில் , குடந்தை மாநகரச்  செயலாளர் ச.செழியன், தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர்கள்  வழக்கறிஞர் ரெ‌.சிவராசு ,மா.சீனிவாசன்,ரெ.செயக்குமார்  ப.சந்திர சேகர் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நகரச் செயற்குழு உறுப்பினர் கோ.பாலன் நன்றி கூறினார்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.