ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திராவிட மாடலா? வரலாற்றுத் திருட்டு மாடலா?

திராவிட மாடலா? வரலாற்று


த் திருட்டு மாடலா?


தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தையும், அதற்காக ஈகம் செய்த தலைவர்களை மறைக்கும் வகையிலும் நவம்பர் 1ஆம் நாள் கொண்டாடப்பட்டு வந்த "தமிழ் நாடு நாள்" விழாவை  சூலை 18ஆம் நாளுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாற்றி அமைத்து உத்தரவிட்டது. 


கீழே குப்புறத் தள்ளிய குதிரை குழி பறித்த கதையாக சூலை 18ஆம் நாளன்று அறிவிக்கப்பட்ட  தமிழ்நாடு நாளைக் கூட திராவிடத்தின் வெற்றித் திருநாளாக ஸ்டாலின் அரசு மாற்றியுள்ளது.


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை விளம்பரத்தில் அண்ணாவின் படத்தை மட்டும் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளது.


திமுக தமிழர்களை திராவிட நாடு மயக்கத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், காந்தியவாதியான சங்கரலிங்கனார் தமிழ் நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார். ஆனால்,  சங்கரலிங்கனாரின் படம் விளம்பரத்தில் இல்லை.


1963ஆம் ஆண்டு வரை திராவிட நாடு பேசிவந்த திமுகவிற்கு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை  பெரும் பேரிடியாக இருந்து வந்தது. அதன் காரணமாக திமுகவின் தலையாயக் கொள்கையாக தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை இருக்க வில்லை. தீவிரப் போராட்டங்கள் எதுவும் நடத்த திமுக முன்வரவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததோடு தன் எல்லையை சுருக்கிக் கொண்டது.


ஆனால் இதை களப் போராட்டமாக முன்னெடுத்தவர் ம.பொ.சி. ஆவார். தமிழக சட்ட மன்ற முற்றுகைப் போராட்டம், தமிழ்நாடு பெயர் கோரிக்கை வாரம் என்று தீவிரப் பரப்புரையை தமிழகமெங்கும் முன்னெடுத்தவர் அவர் மட்டுமே. அது மட்டுமல்ல, அண்ணா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நிலையில், அவரை நேரில் சந்தித்து முதல் தீர்மானமாக தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை தானே கொண்டுவரப் போவதாக அண்ணாவிடம் வாதாடியவரும் இவரே. அதுபோல் அண்ணாவும் இந்த உண்மையை மறைக்காமல், இது ம.பொ.சிக்கு கிடைத்த வெற்றி அல்ல, அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று தமிழக சட்டமன்றத்தில் பாராட்டிப் பேசியுள்ளார்.


அதுபோல் கி.ஆ.பெ.விசுவநாதம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், சீவானந்தம் போன்ற தலைவர்கள் தொடர்ந்து தமிழ் நாடு பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வந்துள்ளனர்.


இப்படி தமிழகத் தலைவர்கள் நிறைய பேர் குரல் கொடுத்து வந்துள்ளதை மூடி மறைத்து அண்ணாவை மட்டும் முன்னிலைப் படுத்துவதற்குப் பெயர் திராவிட மாடல் என்று கருதிக் கொள்ளாதீர்கள், அது , வரலாற்றுத் திருட்டு மாடலாகும்!


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.