தமிழக உழவர் முன்னணி, பட்டீச்சுரம், தமிழ்த் தேசியப் போியக்கத் தோழா்கள் கோாிக்கை மனு
தமிழக உழவர் முன்னணி, பட்டீச்சுரம்
===============================
தகவல்
===============================
இன்று (15.8.2022) 75 வது விடுதலை நாளை முன்னிட்டு பட்டீச்சுரம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்கு பட்டீச்சுரம் ஊராட்சி தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் நம்முடைய பிரச்சனையான யூரியா தட்டுப்பாடு, கூடுதல் பொருட்களை வாங்க சொல்வது பற்றிய மனுவை திரு.அன்புச்செழியன், திரு.எஸ்.சேகர், திரு.மாரியப்பன், திரு.இராஜேந்திரன், திரு.தூயவன் ஆகியோர் சென்று மனு அளித்தோம். மனுவை பெறுவதற்கு பொறுப்பு உதவி வேளாண்மை இயக்குநர் அவர்கள் வருகை புரிந்தார்கள். அவரிடம் மனு கொடுத்து விளக்கினோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உழவர்களின் போராட்டம் தவிர்க்க இயலாதது என்று கூறினோம். கிராம சபை கூட்டத்தில் திரளான பட்டீச்சுரம் மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Leave a Comment