குறும்பூா் தமிழ்மணி அவா்களின் புதல்வன் தோழர் முகேஷுக்கு வீரவணக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் திருச்செந்தூர் மு.தமிழ்மணி அவர்களின் மகனும், பேரியக்கச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்து வந்த இளைஞருமான தோழர் முகேஷ், நேற்று (27.08.2022) மாலை காலமானார்.
தோழர் முகேஷ் பேரியக்கத்தின் செயல்பாடுகளிலும், திருச்செந்தூர் வட்ட தமிழக உழவர் முன்னணி செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கெடுத்து வந்தார். தாமிரபரணி ஆற்று மணல் கொள்ளைத் தடுப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது இழப்பு தோழர் தமிழ்மணி குடும்பத்தினர்க்கு மட்டுமின்றி பேரியக்கத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பேரிழப்பாகும்.
தோழர் முகேஷின் இறுதி வணக்க நிகழ்வு இன்று பிற்பகல் குரும்பூர் இடுகாட்டில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் தோழர் முகேசின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். தோழர் தமிழ்மணி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பேரியக்கப் பொருளாளர் தோழர் ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, கோ. மாரிமுத்து, வே.க. இலக்குவன், மகளிர் ஆயம் மதுரை அமைப்பாளர் தோழர் இளமதி, தோழர்கள் முத்துமாரி, லெனின், விசய நாராயணப் பெருமாள், சிவா, உச்சிராசா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் உறவினர்களும் ஊர்ப் பொது மக்களும் பங்கேற்றனர்.
தோழர் முகேஷுக்கு வீரவணக்கம்!
Leave a Comment