ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்தக்கோரி செயல் அலுவலர் உடன் சந்திப்பு.

அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்தக்கோரி செயல் அலுவலர் உடன் சந்திப்பு.


அறந்தாங்கியில் உள்ள அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு வருகின்ற 8.9.2022 அன்று நடைபெற இருக்கின்றது. இக் குடமுழுக்கினை தமிழ் வழியில் கருவறை பூசை, வேள்விச்சாலை சடங்குகள்,கோபுரக் கலச திருக்குடமுழுக்கு நன்னீராட்டு உள்ளிட்ட சடங்குகளை தமிழ் முறைப்படி மறைஓதுவார்களையும், சிவாச்சாரியார்களையும் கொண்டு நடத்த கோரி கடந்த 21.7. 2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்-தஞ்சை அவர்களிடம் தெய்வத்தமிழ் பேரவையின் சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். இந்த  மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 27.07. 2022 அன்று இணை ஆணையர் அவர்களிடமிருந்து செயல் அலுவலருக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டு அதன் நகல் தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு வே.பூ.இராமராசு அவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக அச்சடிக்கப்பட்டிருந்த குடமுமுழுக்கிற்கான அழைப்பிதழ் முழுவதும் சமஸ்கிருத சொற்களில் நமது பார்வைக்கு வந்திருந்தது. எனவே தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த தேவையான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செயல் அலுவலரிடம் தெய்வத்தமிழ் பேரவை நிர்வாகிகள்  ஒருங்கிணைப்பாளர் வே.பூ.இராமராசு, தோழர் மூ.த. கவித்துவன், தமிழ்த் தேசிய பேரியக்க திருச்சி மாநகர செயலாளர்  இலக்குவன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நா.இராசாரகுநாதன் ஆகியோர் இதை காலை 11.00மணியளவில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் செயல் அலுவலரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தோழர்கள் மருது சேயோன், அன்பு, இராசமாணிக்கம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


"அறநிலையத்துறை சார்பில் அச்சடிக்கப்படும் குடமுழுக்கிற்கான அழைப்பிதழ் முழுவதும் தமிழில் அச்சடிக்கப்படும் என்றும், வேள்விச்சாலை, கருவறை பூசை கோபுரக் கலச நன்னீராட்டு உள்ளிட்டவற்றில் தமிழ் முறைப்படி தமிழ் ஓதுவார்கள், சிவாச்சாரியார்களைக் கொண்டு சமஸ்கிருதத்துக்கு இணையாக நடத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது" என்றும் செயல் அலுவலர் நம்மிடம் தெரிவித்தார்.

தமிழ்வழி வழிபாட்டிற்கான, குடமுழுக்கிற்கான தெய்வத் தமிழ்ப் பேரவையின்  வெளியீடுகளையும், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் தமிழ் வழி  குடமுழுக்கிற்கான உயர்நீதிமன்ற ஆணை நகலையும் செயல் அலுவலரிடம் இன்று நேரில் அளித்திருக்கிறோம்.


மேலும் வீரமாகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகளையும் சந்தித்து தமிழ் வழி வழிபாட்டிற்கான தேவையையும் வலியுறுத்தியிருகின்றோம்.

 தெய்வத்தமிழ்ப் பேரவையின் இந்த முயற்சிக்கு அறந்தாங்கி உள்ளூர் மக்கள் பெரும் ஆதரவும் வரவேற்பும் அளித்துள்ளனர்.




No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.