ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த் தேசியப் போியக்கத் தலைவா் பெ. மணியரசன் எழுதிய "இனம், வா்க்கம், மதம், சாதி"

 நூல் புதிது

========

“இனம், வா்க்கம், மதம், சாதி"

=====================


-தேசியன்

=======


சென்னை “பன்மைவெளி"ப் பதிப்பகம் இப்போது ஆறு புதிய நூல்கள் வெளியிட்டுள்ளது. (1) தமிழ்த் தேசியப் போியக்கத் தலைவா் பெ. மணியரசன் எழுதிய "இனம், வா்க்கம், மதம், சாதி", (2) பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் முனைவா் சுப. உதயகுமாரன் எழுதிய “திக்கற்றவா்களுக்குத் தேசியமே துணை", (3) ஐயா ம.பொ.சி. அவா்களின் புதிய தமிழகம் படைத்த வரலாறு" (மறுபதிப்பு), (4) தமிழ்த் தேசியப் போியக்கத்தின் பொதுச் செயலாளா் கி.வெங்கட்ராமன் எழுதிய “FIGHTING GLOBAL WARMING: A Political Economic Perspective (ஆங்கில நூல்), 5. கல்வியாளா் க. உமா மகேசுவரி எழுதிய “எது கல்வி", (6) பெ. மணியரசன் எழுதிய “இந்தியம் என்பது ஆரியமே - சாவா்க்கா், சங்கராச்சாரியார், சவகா்லால் நேரு வரை" என்பவையே அந்த ஆறு நூல்கள்.இந்நூல்கள் குறித்து ஒரு சிறு அறிமுகம்: 


“இனம், வா்க்கம், சாதி, மதம்" என்ற நூல் - இவை ஒவ்வொன்றின் சமூகவியல் செயல்பாடுகள் குறித்துப் பேசுகின்றது. 


இவற்றிற்கிடையே உள்ள பொதுத்தன்மை ஒன்றை வாசகா்கள் கவனிக்க வேண்டும். இனம், வா்க்கம், மதம், சாதி ஆகிய இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுள் ஒவ்வொன்றிலும் எது சரியானது எது தவறானது என்பதுபற்றி இந்நூல் ஆய்வு செய்யவில்லை.  இவற்றுள் எது இயற்கையான சமூகப் பிரிவு, எதெது செயற்கையான மனிதப் பிரிவு என்று ஆய்வு செய்கிறது.

 

இவற்றுள் இனம் என்பது உலகு தழுவிய அளவில் நிலவும் இயற்கையின் படைப்பு! இனத்தினின்று மொழியும் தாயகமும் பிரிக்க முடியாதவை. இம்மூன்றும் இயற்கையின் படிமலா்ச்சிப் படைப்புகள். 


வா்க்கம், மதம், சாதி இவற்றை மனிதா்களே உருவாக்கிக் கொண்டனா். அவற்றிலும் வா்க்கமும், மதமும் உலகு தழுவி இருக்கின்றன. ஆனால், சாதி என்பது ஆரிய வா்ணாசிரம ஆதிக்கத்தின் கீழ் மட்டுமே உருவானது: இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே உள்ளது. 


நவீன எந்திர முதலாளிகளின் உற்பத்தி மற்றும் வழங்கல் ஊடாகத்தான் தேசிய இனம் (Nationality) முதல்முதலாக உருவானது என்பதுபோன்ற கருத்துப் பிறழ்வு கம்யுனிஸ்ட்டுகளிடம் உள்ளது. இதை மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்நூல். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் தேசம் பற்றியும் தமிழா் இனம் பற்றியும் வரையறைகள் தமிழ் இலக்கியங்களில் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இன அடிப்படையில் தமிழா்களுக்கும் ஆரியா்களுக்கும் இடையே நடந்த போர்களையும் இந்நூல் குறிப்பிடுகிறது. இதுகுறித்து மேலும் விளக்கங்கள் இந்நூலில் உள்ளன. 


நவீன பாட்டாளி வா்க்கம் தனது இயல்பிலேயே புரட்சிகரமானது; நிகரமை (சோசலிச)ப் புரட்சியை முன்னெடுத்துத் தலைமை தாங்கும் வரலாற்றுப் பாத்திரம் கொண்டது என்னும் மார்க்ஸ்-லெனின் கருத்துக்களை இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது. 


ஆா்எஸ்எஸ், பாசக வகையறா முன்வைக்கும் இந்துத்துவா என்பது அவா்களின் முகத்திரை முழக்கம்; அவா்களின் அசல் முகம் ஆரியம் என்று அடையாளம் காட்டுகிறது. எனவே அவா்களை ஆரியத்துவா வாதிகள் என்கிறது. இதேபோல் இன்னொரு முகமூடியையும்  ஆா்எஸ்எஸ், பாசக வகையறா அணியம் செய்துள்ளனா். அது இந்து என்பது மதம் மட்டுமல்ல, அதுவே இனமுமாகும் என்ற முகமூடியே அது!


இதன் பின்னால் உள்ள சதி என்ன, இதை எதிர்கொள்ளத் தேவையான செயல் உத்திகள் என்னென்ன என்பவை உள்ளிட்ட செய்திகள் இந்நூலில் உள்ளன. 


சாதி குறித்து தமிழ்தேசியா்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வரையறுக்கிறது. தமிழ்க்குடி என்ற பெயரில் சாதி புதுப்பித்தல் கூடாது. எந்தப் பெயருடன் வந்தாலும் சாதியின் சாரம் பிறப்பால் உயா்வு தாழ்வு கற்பிப்பதுதான்! வருணாசிரமம் பெற்றெடுத்த சாதிக்கு சங்ககாலத்தில் உயா்வு தாழ்வின்றி வாழ்ந்த தமிழ்க்குடிகளின் பெயரைச் சூட்டுவது வருணாசிரமத்துக்குச் செய்யும் புதிய ஒப்பனையாகவே முடியும். எந்த வடிவில் வந்தாலும் சமூகச் சமநிலையைக் கெடுக்கும், தமிழா் ஒற்றுமையைக் கெடுக்கும். 


மேலும் புதியபுதிய கருத்துக்களைக் கொண்டது “இனம், வா்க்கம், மதம், சாதி" என்ற நூல். 

இதன் விலை ரூபாய் 85, பக்கங்கள் 96. 


கிடைக்குமிடம் :

பன்மைவெளி 

எஸ்பி. 10/37 முதல்தளம், 

மூன்றாவது தெரு, முதல் பிரிவு,

கலைஞர் கருணாநிதி நகர்

சென்னை 600078. 

தொலைபேசி 044 24742911

பேச – 9840848594 / 9443918095

================================

பன்மைவெளி வெளியீட்டகம்

================================

பேச: 98408 48594, 94439 18095

தொலைப்பேசி : 044 - 2474 2911

================================

முகநூல் : FB.com/panmaiveli

மின்னஞ்சல் : panmaiveli@gmail.com

கீச்சு : https://twitter.com/panmaiveli 

================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.