ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கல்விக் கொள்கை உயர் மட்டக் குழுவின் மண்டல அளவிலான கருத்துக் கணிப்பு கூட்டம் 21.09.22
இன்று 21.09.22 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் மாநில  கல்விக் கொள்கை உயர் மட்டக் குழுவின் மண்டல அளவிலான கருத்துக் கணிப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் மதுரை மாவட்டத் சுற்றி உள்ள 6 மாவட்ட அளவில் மாணவர், பெற்றோர்,சமூகப் பணியாளர்கள் என சுமார் 500 கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் மகளிர் ஆயம் சார்பாக தலைவர் அருணா அவர்கள் கலந்து கீழ்க்கண்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன.


*மாணவர்களில் தங்கள் பிரச்சனைகளைக் கூறும் பொழுது அநேகர் மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர் என்ற பிரச்சினையை அழுத்தமாக கூறினர்.இப்பழக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் பொறுப்பு அரசிற்கு உள்ளது.போதைப் பொருட்களைப் பட்டியலிடும் பொழுது

'அபின், குட்கா, பான்பராக்,கஞ்சா'போன்றவை மட்டுமே போதைப் பொருட்கள் ஆகாது.தமிழக அரசால் விற்கப்படும் 'விஸ்கி,பிராந்தி,பீர்' போன்ற அனைத்தும் போதைப் பொருட்களே.எனவே மாணவர்களை காக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் டாசுமாக் கடைகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.டாசுமாக் கடைகள் மூடப்படாமல் அரசின் எந்த நடவடிக்கையும் மாணவர்களை 'போதை' பழக்கத்திலிருந்து விடுவிக்காது.


*தாய்மொழி வழிக் கல்வியே சிறந்த கல்வி.எனவே உடனடி நடவடிக்கையாக முதல் ஐந்து வகுப்புகளில் அனைத்துப் பள்ளிகளிலும்  தமிழ் பயிற்றுமொழியாக்கப்படவேண்டும்.*மாணவர்க்கு ஆசிரியர்களே முதன்மை மனநல மருத்துவர்.எனினும் சமூகத்தில் உள்ள தீண்டாமை மற்றும் பாலியல் வன்கொடுமையால் சில மாணவர்கள் ஆழ்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் சுழல் உள்ளது.எனவே அனைத்துப் பள்ளிகளிலும் ஆற்றுபடுத்தலுக்கான(councelling) சிறப்பு ஆசிரியர் அமர்த்தப்பட வேண்டும்.இதற்கு  'நிர்பயா நிதி 'யில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.நிர்பயா நிதி முறையாக பயன்படுத்தப்படவேண்டும்.


* கலந்துரையாடலில் பேசிய மாணவ மாணவியர் தங்களை அறிமுகப்படுத்தும் போது 'மெட்ரிகுலேசன்' பள்ளி என்று அறிமுகப்படுத்தினர்.தமிழகத்தில் 'சமச்சீர்'கல்வி அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்த விட்டன. இன்று வரை இவர்கள் பள்ளியில் பெயர்ப்பலகை மாற்றப்படவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.இது மக்களை ஏமாற்றும் செயல்.எனவே அரசு தலையிட்டு பெயர்ப்பலகையில் 'சமச்சீர் கல்விப் பள்ளி 'என்பதனை மக்களுக்கு தெளிவாக வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இக் கருத்துக்களை அரசின் சரியான அரங்கில் தெரிவித்ததை மகளிர் ஆயம் தன் கடமையாகக் கருதுகிறது.நன்றி.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.