கருவறைத் தீண்டாமை தீர்ப்பை முறியடிக்க தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று !
தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர் !" கருவறைத் தீண்டாமை தீர்ப்பை முறியடிக்க தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று ! தெய்வத் தமிழ்ப் பேரவை குடந்தையில் அரங்க கூட்டம்
============================================================== கோயில் நகரம் குடந்தையில் (24.09.2022) காரி சனிக்கிழமை மாலை 06.00 குடந்தை நாடார் திருமண மண்டபத்தில் தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர் !" கருவறைத் தீண்டாமை தீர்ப்பை முறியடிக்க தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று என்ற கோரி க்கையை முன்வைத்து கூட்டம் நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை சேர்ந்த தமிழ்திரு உ.அருளானந்தம் தலைமை தாங்கினார். தமிழ்த்திரு ச.பொய்யாமொழி முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் ஐயா கி.வெங்கட்ராமன் அவர்களும், ,,இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் பதிணென்சித்தர்பீடம், சித்தர் மூங்கில் அடிகளார் சிறப்புரையாற்றினார்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் நா.வைகறை நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நன்றியுரையாற்றுகிறார். நிகழ்வைப் தெய்வத் தமிழ்ப் பேரவை குடந்தை பொறுப்பாளர் தமிழ்த்திரு க.விடுதலைச்சுடர் ஒருங்கிணைத்தார். க.தீந்தமிழன் நன்றி கூறினார்.இந்நிகழ்வில் வள்ளலார் பணியகத்தின் ஒருங்கிணைப்பாளர் இராசமாணிக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழுப் உறுப்பினர் பழ.இராசேந்திரன் , பூதலூர் ஒன்றிய செயலாளர் பி.தென்னவன், ஆன்மீகர்கள் , பேரியக்க தோழர்கள் தஞ்சை லெனின் , ச.செழியன் த.தே.பே திருவலஞ்சுழி கிளைச் செயலாளர் கி.பிரபாகரன் தமிழக உழவர் முன்னணி ஆதனூர் பொறுப்பாளர் பா.திருஞானம் தமிழ் இன உணர்வாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர். ================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
Leave a Comment