புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்
புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களின்
13 ஆம் ஆண்டு நினைவேந்தல்
========================================
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் பெண்ணாடம் – சௌந்திர சோழபுரம் செங்கள நினைவிடத்தில் 06.10.2022 அன்று மாலை 05.30 மணி அளவில் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் இணையரும் புரட்சித் தாய் வாலாம்பாள் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புலவரின் இளைய மகன் க. சோழநம்பியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
புலவரோடு 12 வருடங்கள் சிறையில் இருந்த இராசமாணிக்கம் அவர்களின் படத்தினை புரட்சிக்கர இளைஞர் முன்னணி பொருப்பாளர் தோழர் மணிவாசகம் திறந்து வைத்தார்.
நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைத் தலைவர் தோழர் க. முருகன், தோழர் சௌ.இரா. கிருட்டிணமூர்த்தி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தி. சின்னமணி, பேரியக்கத் தோழர்கள் சி. பிரகாசு, தி. ஞானபிரகாசம், பாவலர் சிலம்புச்செல்வி ஆகியோர் வீரவணக்க உரை ஆற்றினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பி. வேல்முருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், மகளிர் ஆயம் தோழர்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், புலவர் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Comment