ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்ப்பேரரசன் இராசராசனுக்குப் புகழ் வணக்கம் செலுத்த வாருங்கள்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது!


 ==================================          =======================                                    

தமிழ்ப் பேரரசன் இராசராசன் சோழப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட 1037- ஆம் ஆண்டு  வரும்  3.11.2022 அன்று வருகிறது. 985- ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டார். அவர் பிறந்த விண்மின்(நட்சத்திரம்)சதயம் எனவே அவர் முடிசூட்டிக் கொண்ட விழா ஐப்பசி சதய நாளில்- சதய  விழாவாகக் கொண்டாடப்படுகிறது.         

                              

 தமிழ்த்தேசியப் பேரியக்கமும் , தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக் குழுவும் ஆண்டுதோறும் பேரரசன் சதயவிழா நாளில் தஞ்சையில் உள்ள பெருவேந்தன் இராசராசச் சோழன்  சிலைக்கு  மாலை அணிவித்து  புகழ் வணக்கம் செலுத்தி வருகிறது.                                   


வரும் தி.பி 2053 ஐப்பசி 17  3.11.2022 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தஞ்சைப் பெரிய கோயில் அருகே உள்ள பெருவேந்தன் இராசராசன் சிலைக்கு மாலை அணிவிக்கும்  சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்!                                                                     


"மக்கள் தலைவன் (சனநாதன்) " "அரசருக்கு அரசன் (இராசராசன்) " எனப் சிறப்புப் பட்டங்கள் பெற்றவர்  நம் தமிழினத்தின் அருண்மொழி வேந்தன்(அவர் இயற்ப்பெயர் அருண்மொழி). தமிழ் இனத்தின் வீரம் ,அறிவு, அறம் மூன்றின் அடையாளச்  சின்னம் இராசராசன் ! இவற்றின் ஆன்மிக வடிவமாக,கலைப் பெட்டகமாக , தமிழன அடையாளமாக, உலகப் புகழ்ச்  சின்னமாக, இராசராசன் எழுப்பிய  தஞ்சைப் பெருவுடையார் கோயில் விண்ணளாவி  நின்று விரிபுகழ் பேசுகிறது.                              


நிலம் அளந்து, புதியப் நீர்ப்பாசனத் திட்டங்கள் உருவாக்கி , ஏற்கனவே தம் முன்னோர்கள் கொண்டு வந்த குடவோலை , சனநாயக நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்தி , போர் வீரத்தில் புதிய உச்சம் தொட்ட தமிழ்ப் பெருவேந்தன்  இராசராசனுக்குப் புகழ் வணக்கம் செலுத்த வாருங்கள் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது.                                                                                                                      


வரும் 3.11.2022 வியாழன் காலை10.30 மணிக்குத் தஞ்சைக் காவேரி சிறப்பங்காடி அருகே  கூடி, அங்கிருந்து அணிவகுத்துச் சென்று பேரரசன் இராசராசன் சிலைக்கு மாலை அணிவிப்போம். வாருங்கள்!                            


                                                       தமிழ்த்தேசியப் பேரியக்கம்                                                                           

    தஞ்சை மாவட்டம் தொடர்புக்கு:    9942403641,9443617757

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.