தமிழ்நாடு அரசே! உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவி!
தமிழ்நாடு அரசே! உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவி!
=================================
திருச்சியில் வரும் 28.11.2022 அன்று பெருந்திரள் உழவர் ஆர்ப்பாட்டம்!
=================================
இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண் கொள்கையை அறிவித்து மரபுவழிப்பட்ட இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுபோல், தமிழ்நாட்டிலும் வேளாண்மையை இலாபகரமான தொழிலாகவும், வளங்குன்றா வேளாண்மையாகவும் நடத்துவதற்கும் - தமிழர் மரபுவழி வேளாண்மையைப் பாதுகாக்கவும் - தமிழ்நாடு அரசு உடனடியாக உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, வரும் 28.11.2022 அன்று, திருச்சியில் உழவர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நவம்பர் 28 - திங்கள் அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.
தமிழ்நாடெங்கும் இயற்கை வேளாண்மை செய்து வரும் செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், உழவர் பெரு மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தமிழ்நாடு அரசே! உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவி!
==============================
செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி
==============================
பேச: 9443904817, 9585573610, 9443291201
==============================
Leave a Comment