ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மதுரையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! மரபு வேளாண் உழவர்கள், மரபு மேய்ச்சல்காரர்கள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கான ஒருங்கிணைந்த கொள்கை முடிவை எடுக்க

 மதுரையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 


மரபு வேளாண் உழவர்கள், மரபு மேய்ச்சல்காரர்கள் மற்றும் சித்த மருத்துவர்களுக்கான ஒருங்கிணைந்த கொள்கை முடிவை  எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இன்று 7.3.2023  செவ்வாய்க்கிழமை  நண்பகல் 3.00 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.











இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கி.வெங்கட்ராமன் (ஒருங்கிணைப்பாளர், தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம்) தலைமை வகித்து தொடக்க உரையாற்றினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கென்னடி ( தேனி மலை மாடுகள் சங்கம்), தேவசகாயம் ( ஒருங்கிணைந்த பாரம்பரிய நாட்டு மருத்துவர்கள் சங்கம்),  முருகன் ( துணை ஒருங்கிணைப்பாளர், தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கம்),  விஜய் விக்ரமன் ( சித்த மருத்துவ பேரியக்கம்), சுரேஷ் குமார் ( சிதம்பரம் வண்டல் மண் குழு) , சின்னையா நடேசன் ( நிறுவனர்,  இயற்கை இந்தியா), ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


இளஞ்சென்னியன்  ( தமிழ் நாடு சமூக மேய்ச்சல் கூட்டமைப்பு), தமிழ் மணி (துணைத் தலைவர், தமிழக உழவர் முன்னணி) க.பாண்டியன் (ஆதிவாசிகள் விடுதலை முன்னணி) கதிர் நிலவன் (மதுரை மாநகர் செயலாளர் தமிழ்த் தேசியப் பேரியக்கம்),   தோழர் அருணா (தலைவர், மகளிர் ஆயம்), கர்ணன் ( தமிழ்த் தேசிய உணர்வாளர் கூட்டமைப்பு) அன்பு உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


இந்தக் ஆர்ப்பாட்டத்தில்,  உயிர்ம வேளாண்மை வாரியம், மேய்ச்சல் சமூக மேம்பாட்டு வாரியம், சித்த மருத்துவ மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு அமைக்கக் கோரியும், டாட்டா கார்கில் பெருங்குழும நிறுவனங்களுக்காக விநியோகம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை  தடை செய்யக்கோரியும் பலரும் பேசினர்.


பெருந்திரள் ஆர்ப்பாட்ட முடிவில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.  ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம்  தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.