சென்னையில் மொழிப்போர் ஈகியர்க்கு வீரவணக்கம்!

சென்னையில் மொழிப்போர்
ஈகியர்க்கு வீரவணக்கம்!
சனவரி 25 - மொழிப் போர் நாளையொட்டி, சென்னை வள்ளலார் நகர் மூலக்கொத்தளம் இடுகாட்டிலுள்ள 1938 - மொழிப்போர் ஈகியர் நடராசன் - தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்திலும், டாக்டர் தருமாம்பாள் நினைவிடத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், ஆசீவகம் சமய நடுவத் தலைவர் முனைவர் ஆசீவக சுடரொளியார், திரு. வேலு சுபராசன் (உலகத் தமிழர் இயக்கம்), ஐயா விசிறி சாமியார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் பங்கேற்றனர். பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் வெற்றித்தமிழன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைப் பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன், அம்பத்தூர் த.தே.பே. செயலாளர் தோழர் மு.ச. அன்புகிட்டு, தோழர் இலட்சுமி அம்மாள், தோழர்கள் மு. கவியரசன், ஸ்டான்லி, திரையன், மு. பொன்மணிகண்டன், வளவன், பூபாலன், ஆசிரியர் இளங்கோ, செழியன், ஹேமா உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
மொழிப்போர் ஈகியர்க்கு வீரவணக்கம்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Leave a Comment