ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மூன்றாவது மொழியென இந்தியைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

 


மூன்றாவது மொழியென இந்தியைத்
திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து
திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் உள்ள காதி கிராஃப்ட் முன்பு "இந்திய அரசே! மூன்றாவது மொழியான இந்தியைத் திணிக்காதே!
கல்வியை முற்றிலுமாக மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவா" என்ற முழக்கத்தை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க.இலக்குவன் தலைமை ஏற்றார். தோழர் மு.தியாகராசன் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் நா. இராசா ரகுநாதன், மூ.த.கவித்துவன், வே.பூ.இராமராசு, கேச.இனியன், ஐயா அ.மனுவேல் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ஐயா ம.ப.சின்னத் துரை, மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் திரு பஷீர், பைந்தமிழ் இயக்கத்தின் இயக்குநர் புலவர் ஐயா தமிழாளன், உலகத் தமிழ்க் கிறித்தவர் அமைப்பின் திருச்சி பொறுப்பாளர் திரு பாரி மன்னன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருவெறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் அழகர்சாமி, ஐயா சத்தியமூர்த்தி தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், வேதமுத்து, தமிழரசன், திருமதி யோகாம்பாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.