ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

எது உலக மொழி ?

எது உலக மொழி ?

கூடுதலான காலனிகளைப் பெற்றிருந்த இங்கிலாந்தும், அதையடுத்து பிரான்சு, போர்த்துக்கல், ஆலந்து நாடுகளும் - ஆப்பி¡¢க்க கிழக்காசிய நாடுகளும், ஸ்பானியர்கள் தென் அமொ¢க்க நாடுகளிலும் பெற்றிருந்த ஆட்சியதிகாரத்தைக் கொண்டு உள்நாட்டு மொழிகளை மெல்ல மெல்ல அகற்றி தங்கள் மொழி, உடை, பண்பாட்டினைப் புகுத்தினர்.

அவ்வகையில்தான் ஆங்கிலம் இந்தியத் துணைக்கண்டம் உட்பட்ட ஆசிய ஆப்பி¡¢க்க நாடுகளில் கோலோச்சத் தொடங்கியது. தங்கள் மொழி, பண்பாடே உயர்ந்ததென்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க ஆதிக்க சாதியைச் சார்ந்த அரசுப் பணியிலிருந்தோரைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆயினும் பல நாடுகளில் ஆதிக்கம் பெற்றிருந்த ஸ்யானியர்களைவிடவும் ஆங்கிலேயரே தங்கள் மொழித் திணிப்பைக் கல்வி முறையிலும் கூடுதலாகப் புகுத்தினர். அதனாலேயே ஆங்கிலம் உலக மொழி என்றும் உயா¢ய மொழி என்றும் இந்தியாவிலிருந்த ஆதிக்கச் சாதியினரை பரப்புரை செய்தனர்,

இன்று உலகப் பந்து முழுவதும் பெருமளவு பரவியுள்ள தமிழினத்தார் பல நாடுகளில் செல்வாக்குடன் வாழ்கின்றனர். தமிழ் மொழி அலுவல் மொழியாகச் சில நாடுகளில் உள்ளன.

மறுபுறம் தாய்மொழிக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்தும் செல்வாக்குப் பகுதியினர் கூறிவரும் ஆங்கிலம் உலக மொழி என்ற தோற்றம் சிதைந்து வருகிறது.

சீனரும் தனது பன்முக உற்பத்தி ஆற்றல், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றால் பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. சீன நாட்டின் சந்தை ஆற்றலும் பா¢மாணமும் சீன மொழியினை ஒரு உலக மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக்கி வருகிறது என்பதைக் கீழ்க்காணும் தகவல் வழி அறியலாம்.

சீனரல்லாத சீன மொழி படிப்போர் உலகு முழுவதும் 3 கோடி (2005)
சீனரல்லாத சீன மொழி படிப்போர் - திட்டமிடப்பட்டுள்ளது 10 கோடி (2007)
சீன மொழி கற்பிக்கும் பல்கலைக் கழகங்கள் 100 நாடுகளில் 2300
சீனாவிலேயே வந்து படிக்கும் மாணவர்கள் 8600
800 அமொ¢க்கப் பல்கலைக் கழகங்களில் சீனமொழி வகுப்பு நடத்தப்படுகின்றது.
சீனமொழி கற்றுத் தரும் கன்பூசியஸ் பயிற்சி நிலையம் சியோல், அமொ¢க்கா, கென்யா, உஸ்பெக்கிஸ்தான் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. தென் ஆப்பி¡¢க்காவில் தொலைக்காட்சி வழியே சீனம் (மாண்டா¢ன்) கற்பிக்கப்படுகிறது.

நன்றி : இந்து நாளிதழ் 6-5-2006
நன்றி : தமிழர் கண்ணோட்டம் சூன் 2006

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.