விலைவாசி உயர்வும் காலனிச் சுரண்டலும்
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மார்ச் 2010 இதழின் தலையங்கம்)
“விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது; இது ஒரு உலகு தழுவிய சிக்கல்” என்று இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்தார்.
இந்திய அரசின் கொள்கை முடிவைத்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் அறிவிப்பார் என்பதால் இது தில்லி அரசின் அறிவிப்பு என்பது தெளிவு.
அரசு அறிவித்திருப்பது போல் இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வு 20 விழுக்காடு அளவுக்கு இருப்பது தவிர்க்க முடியாததல்ல. உலக நாடுகளில் இதையொத்த அளவு விலை உயர்வு இருப்பதாக சொல்வதும் உண்மையல்ல.
தான் வல்லரசு அணிவகுப்பில் சேர்ந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்திய அரசும் இடம்பெற்றுள்ள ஜி-20 நாடுகளில் பெரும்பாலானவற்றில் 10 விழுக்காட்டிற்கு மேல் விலை உயர்வு இல்லை.
இந்தியாவில் தான் அரசு அறிவித்துள்ள கணக்கின் படியே 2009 திசம்பர் முடிய விலை உயர்வு சராசரியாக 15 விழுக்காடு. அதிலும் உணவுப் பொருள்களின் விலையேற்றம் 25 விழுக்காட்டைத் தாண்டி விட்டது.
நெல் கொள்முதல் விலையை கடந்த 5 ஆண்டுகளில் 80 விழுக்காடு உயர்த்திக் கொடுத்ததால் தான் அரிசி விலை இந்த அளவுக்கு உயர்ந்து விட்டது என இந்திய அரசுக் கூறுவது அடிப்படையற்றது.
ஏனெனில் நெல் கொள்முதல் விலை உயர்வுக்கும், சந்தையில் அரிசி விலை நிலவரத்திற்கும் எந்த ஒத்திசைவும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
எடுத்துக்காட்டாக, கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் அரசு அறிவித்த நெல் கொள்முதல் விலை அதிகபட்சம் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால் வெளிச்சந்தையில் அரிசி விலை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்; வரை - அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் 100 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது. இத்துணைக்கும் தமிழகத்தின் நியாயவிலைக் கடைகளில் கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கப்படும் போதே இந்த நிலை.
சர்க்கரை விலையை கவனித்தாலே இன்றைய இன்றியமையாப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்பது எளிதில் விளங்கும்.
2007, 2008 ஆகிய இரண்டுத் தொடர் ஆண்டுகளில் கரும்பு உற்பத்தியும், அதைத் தொடா;;ந்து சர்க்கரை உற்பத்தியும் தமிழகத்திலும், உ.பி., மராட்டியம் போன்ற சர்க்கரை உற்பத்தி மாநிலங்களிலும் அதிகமாகவே இருந்தது.
ஆனால் இந்திய ஆட்சியாளர்களும், சர்க்கரை ஏற்றுமதியில் கோலோச்சும் மார்வாடி - குசராத்தி மொத்த வணிகர்களும் ஏற்படுத்திக் கொண்ட கொள்ளைக் கூட்டணி தான் இப்போது நிலவும் சர்க்கரை விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணமாகும்.
இந்தியா முழுமைக்கும் தேவையான அளவிற்கு சர்க்கரை உற்பத்தி நடந்த போதிலும், கடந்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து உலகில் நிலவிய சர்க்கரைத் தட்டுப்பாட்டை பயன்படுத்தி உலகத் தொழில்துறை நாடுகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு சர்க்கரை ஏற்றுமதியை இந்திய அரசு ஊக்குவித்தது.
இதற்காக 2009ஆம் ஆண்டில் மட்;டும் சர்க்கரை ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் 680 கோடி ரூபாய் வரிச்சலுகை அளித்து உற்பத்திச் செலவை விட குறைவான விலைக்கு உலகச் சந்தையில் விற்க ஊக்குவித்தது.
தங்கள் இலாப வேட்டைக்காக சர்க்கரை மொத்த வணிகர்கள் உள்நாட்டு தேவையைப் பற்றி கவலைப்படாமல் உலகச்சந்தையில் விற்றுத் தீர்த்தார்கள்.
இதற்கு ஆட்சியாளர்களுக்கு பலநூறு கோடி கையு+ட்டுப் பணம் கைமாறியது.
இவ்வாறு செயற்கையான தட்டுப்பாட்டை இவர்கள் ஏற்படுத்தியதால், சர்க்கரை விலை கடந்த சில மாதங்களில் மிக வேகமாக உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை ரூ. 100-ஐத் தொடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தட்டுப்பாட்டையும் மேற்;சொன்ன கொள்ளைக் கூட்டணி தனது வேட்டைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
இப்போது பழுப்பு சர்க்கரை இறக்குமதிக்கு இந்திய அரசு பலநூறு கோடி வரிச்சலுகை அறிவித்துள்ளது. இதிலும் கோடிக்கணக்கில் கையு+ட்டு கைமாறி உள்ளது.
இதே போல் ஒரே ஆண்டில் 3 முறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது தில்லி அரசு. இதற்கு உலக எண்ணெய் விலையை மன்மோகன்சிங் காரணமாகக் காட்டுவது அப்பட்டமான மோசடியாகும்.
ஏனெனில் 2009 தொடக்கத்திலிருந்தே உலகச்சந்தையில் எண்ணெய் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டது.
இன்றைய உலக எண்ணெய்ச் சந்தையில் 1 லிட்டர் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை 21ரூபாய் 46 காசு. அரசுக் கணக்குப்படி இதனை சுத்திகரிக்க இதற்கு மேல் 10 விழுக்காடு செலவாகும். இதன்படி 1 லிட்டர் பெட்ரோல் விலை அதிகபட்சம் 23 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால், ஏறத்தாழ 50ரூபாய்க்கு விற்கிறது.
எனவே எரி எண்ணெய் விலை உயர்வுக்கு உலகச்சந்தை நிலவரம் அடிப்படைக் காரணியல்ல.
உண்மையான காரணி இந்திய அரசின் வரிவிதிப்பே ஆகும்.
இந்திய அரசின் வரியும் கட்டணமும் தான் பெட்ரோல் டீசல் விலையில் ஏறத்தாழ 35 விழுக்காடு ஆகும். பெட்ரோல் டீசல் விலை உயர உயர அரசிற்கு வரிவருமானம் பல்லாயிரம் கோடி கிடைக்கிறது. இந்திய அரசின் முதன்மையான வரி வருவாயாக இதுவே உள்ளது. எனவே, பெட்ரோல் டீசல் விலை உயர்த்துவதை அரசு வருமானத்தைப் பெருக்கும் ஒரு வழியாகவே வைத்துக் கொண்டுள்ளது.
வரும் நிதியாண்டிலிருந்து மண்எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட அனைத்து பெட்ரோலியப் பொருள்களின் விலை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்து எரிபொருள் மானியத்தையும் இரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.
இது பெட்ரோல் டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி, அதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்திற்;கு வழிவகுக்கப் போகிறது.
ஏற்கெனவே பெட்ரோலியத்தின் அடிப்படையில் உற்பத்தியாகும் வேதியியல் உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தை கிட்டத்தட்ட முழுவதும் விலக்கிக் கொண்டு விட்டது. உடனடியாக யு+ரியா விலை 10 விழுக்காடும், பிற உரங்களின் விலை தாறுமாறாகவும் உயரப் போகின்றது.
இந்த விலைஉயர்வு இந்தியா முழுவதையும் தாக்கிக் கொண்டிருக்கிறது என்றாலும், இது முழுவதையும் தமிழர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியத் தேவையில்லை.
ஏனெனில், கிட்டத்தட்ட தமிழகத்தின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் அளவிற்கு இங்கு பெட்ரோலிய உற்பத்தி உள்ளது.
தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலியத்தை தில்லி அரசு அள்ளிச் செல்லாமல் தமிழகத்திடம் விட்டு விட்டாலே இந்தியச் சந்தையில் கிட்டத்தட்ட பாதி விலைக்கு தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
இதே போல், சர்க்கரை உற்பத்தியிலும் தமிழகம் பெரிதும் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும்.
இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக தமிழகம் இருப்பதால், இந்த விலையேற்றத்தைத் தமிழர்கள் சுமக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விலையேற்றம் பொதுவான மக்கள் பிரச்சினை என்பதோடு அடிப்படையில் இது ஒரு தமிழ்த் தேசியப் பிரச்சினை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தமிழர்கள் போராட வேண்டும்.

Leave a Comment