முதலாளியத்திற்கு எதிரான தீப்பொறி க. அருணபாரதி
முதலாளியர்கள் தங்களின் சொர்க்கம் என்று கருதிய வடஅமெரிக்காவில் இப்போது முதலா ளியம் செய்த பாவங்கள் விசாரிக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களுக்கான ஒளிக்கீற்று ஒன்று தோன்றியுள்ளது.
உலகமய நிதி மூலதன ஆதிக்கம், உலகெங்கும் உள்ள நாடுகளில் போலியான ‘வளர்ச்சி’யைக் கட்டமைத்து, மண்ணின் மக்களை வேலை யின்மையில் வாட்டியது. சிறு தொழில்களை நசுக்கிவிட்டுப் பெருமுதலாளிகளை வளர்த்தது. உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய ஞாயமான பணம், ‘இலாபம்’ என்ற பெயரில், விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனிநபர் களாலும், தனியார் நிறுவனங்களாலும் பிடுங்கப் பட்டது.
உலகமய முதலாளிகளின் இந்த சூறையாட லுக்கு ஆதரவாக வடஅமெரிக்கா தொடங்கி பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றுடன் பொருளியல், இராணுவக் கூட்டிணைவை மேற்கொண்டிருந்த இதர நாடுகளும், அவற்றின் அதிகார வர்க்கங்களும் துணை நின்றன.
முதலாளிகளுக்கு எப்பொழுதெல்லாம் பணத் தேவை ஏற்பட்டதோ, அப்பொழுதெல்லாம் இவ்வரசுகள் மக்கள் தலையில் வரிகளைச் சுமத்தி உலகமய முதலாளிகளுக்கு முட்டுக் கொடுத்தன.
உலகமயப் பன்னாட்டு நிறுவனங்கள் மீதும், அவற்றின் கொள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் அரசுகளின் மீதும் உழைக்கும் மக்களுக்கு இருந்த வெறுப்புதான், இன்று முதலாளியத்தின் கொ டுங்கோன்மைக்கு எதிரான போர்க்குரலாக உல கெங்கும் ஒலிக்கிறது. இதனை ஒருங்கிணைத்து சாத்தியப்படுத்திக் காட்டியது தான், ‘வால்ஸ்ட் ரீட்டைக் கைப்பற்றும் இயக்கம்’(ளிநீநீuஜீஹ் கீணீறீறீ stக்ஷீமீமீt).
அமெரிக்கப் பன்னாட்டு முதலாளிய நிறுவனத் தலைமையகங்களும், பங்குச்சந்தைத் தலைமை யகமும் உள்ள சாலை வால்ஸ்ட்ரீட். இந்தச் சாலையைக் கைப்பற்றுவோம் -முதலாளியத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கத்துடன் உழைக்கும் மக்கள் அச்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வை சூறையாடிய முதலாளியத்திற்கு எதிராக சீறிக் கிளம்பியுள்ள இந்நிகழ்வே அமெரிக்க மண்ணில் கிளம்பிய அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று! உலகமய முதலாளிகளின் தாய் மண்ணான வட அமெரிக்க மண்ணில் தான் இந்த முதலாளிய எதிர்ப்பியக்கம் முளைத்துள்ளது..
முதலாளிய ஊடகங்களாலும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றின் வழியாகவும் தொடர்ந்து மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள முதலாளியக் கருத்தியல் களாலும் கவ்வபட்ட உழைக்கும் மக்கள் தற் போது இதிலிருந்து விடுதலை பெற வழி தேட முனைகின்றனர்.
உலகமய பெருநிறுவன முதலாளிய ஆட்சி, உலகெங்கும் விரிவடைய விரிவடைய உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் அது ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. ஒருபுறம் வேலை யின்மை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விரல்விட்டு எண்ணக்கூடிய புதிய பணக்காரர் களை உலகமயம் உற்பத்தி செய்து கொண் டிருந்தது. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, 20 விழுக்காட்டு அமெரிக்கர்கள், அமெரிக்க வருமா னத்தில் 49.4 விழுக்காட்டைப் பெறுவதாகவும், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள 15 விழுக்காட்டு மக்கள் வெறும் 3.4 விழுக்காடு வருமானத்தையே பெறுவதாகவும் அப்போது எடுக்கப்பட்ட அரசுக் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
உலகமயம் ஏற்படுத்தியிருந்த இப்பின்விளைவு களுக்கு எதிராகத் தான், ‘வால்ஸ்ட் டிரீட்டைக் கைப்பற்றும் இயக்கம்’ அமெரிக்காவில் தொடங் கப்பட்டது. "வேலையிழந்த அமெரிக்கர்களே, பங்குச் சந்தைச் சூதாடிகளும், உலகமயப் பன் னாட்டு நிறுவனங்களும் மிகுந்திருக்கும் நியூயார்க் நகரின் வால்ஸ்ட்ரீட் தெருவை முற்றுகை யிடுவோம் வாருங்கள்" என 'ஏட்பஸ்டர்ஸ்' எனப்படும் முதலாளிய நுகர்வியத்திற்கு எதிரான ஓர் ஏடு கடந்த சூலை மாதத்திலிருந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது.
‘வால்ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம்’ என்ற முழக்கத் தோடு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு, ஏராளமான உறுப்பினர்கள் அதில் சேர்ந்து கொண்டிருந்தனர். செப்டம்பர் 17 அன்று அலையலையாக அமெரிக்க மக்கள் வால் ஸ்ட்ரீட் தெருவில் குவியத் தொடங்கினர். அழைப்பு விடுத்த பத்திரிக்கை நிர்வாகி களே வியக்கும் வகையில், மக்கள் தற்காலிகக் குடியிருப்பு களுடன் வால்ஸ்ட்டிரீட்டில் குவிந்தனர். பணசார்பற்ற அரசியல் முதன்மை பெறும் ஒரு புதிய அமெரிக்காவிற்காக நாங்கள் கூடுகிறோம் என்று அவ்வேடு இதனைக் குறிப்பிட்டது.
மக்கள் குவியவே, மேலும் பல்வேறு அமைப்பினர், பன் னாட்டு நிறுவனங்களால் வேலையிலிருந்து விரட்டப் பட்டவர்கள், வீடுகளை இழந்த வர்கள், மாணவர்கள், ஊழியர் சங்கத்தினர் எனப் பல தரப் பினரும் ஒன்று கூடினர்.
உலகமயம் தோற்றுவித் திருந்த பொருளியல் சமநிலை யற்றத் தன்மையை விளக்கும் வண்ணம், ‘நாங்கள் தான் பெரும்பான்மையானவர்கள்’ (கீமீ ணீக்ஷீமீ tலீமீ 99%) என்ற பதாகையை அமெரிக்க உழைக் கும் மக்கள் கையிலேந்தி வால் ஸ்ட்டீரிட் தெருக்களில் நின் றனர்.
நமது ஊர்களில் செய்வதைப் போல் சாலை மறியல் போராட் டங்களை நடத்துவது அமெ ரிக்க மண்ணில் அவ்வளவு எளி தான காரியமல்ல. ஆனாலும், அம்மக்கள் அரசின் அடக்கு முறைகள் எவற்றுக்கும் அஞ்சா மல் தெருக்களை அடைத்துக் கொண்டு அமர்ந்தனர். மறி யலில் அமர்ந்த 80 பேரை காவல்துறை கைது செய்தது. போராடும் மக்களுக்கு ஆதர வாக, எழுத்தாளர்களும், திரைக் கலைஞர்களும் கை கோத்து நின்றனர். முதலாளியத்திற்கு எதிரான அமெரிக்க மக்களின் இத்தொடர் போராட்டத்தை பெரும்பான்மையான அமெ ரிக்க மக்கள் ஆதரிக்கின்றனர் என ஊடகங்களில் வந்த கருத்துக் கணிப்புகள் கூறின.
போராட்டக்காரர்கள் யாரும் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. மாறாக, அங் கேயே தற்காலிகக் குடியிருப்பு களையும், உணவுக்கான ஏற்பாடு களையும் செய்து கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அக்டோ பர் முதல் வாரத்தில், புரூக்ளின் பாலம் நோக்கிய போராட்டக் காரர்களின் பேரணியைத் தொ டர்ந்து 700 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் நடந்து வந்த இந்த நிகழ்வுகளைத் தொ டர்ந்து, அக்டோபர் இரண் டாம் வாரத்தில், பிரிட்டன் நாட்டுத் தலைநகரான இலண் டனில் உள்ள இலண்டன் பங்குச்சந்தை முற்றுகையிடப் பட்டது. இலண்டனைத் தொ டர்ந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், ஜப்பானின் டோக்கியோ, ஹாங்காங், டாய் பேய், பாரீஸ், மேட்ரீட், பெர் லின் என உலகெங்கும் வால் ஸ்ட்டீரீட்டைக் கைப்பற்றும் இயக்கத்தின் வீச்சு தீயாகப் பரவியது.
அக்டோபர் 29 அன்று பிரான்ஸ் நாட்டில் நடை பெறும் பணக்கார நாடுகளின் ஜி-20 கூட்டமைப்பின் கூட்டத் தைத் தொடர்ந்து போராட் டங்கள் மேலும் தீவிரம் பெற்று வருகின்றன. வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் இயக்கத்தின் இணையதளத்தில், இதுவரை 82 நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட நகரங்களில் இவ்வியக்கம் வளர்ந் துள்ளதாகவும், போராட் டங்கள் கூர்மையடைந்து வருவ தாகவும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க, ஐரோப்பிய நாடு களில் தற்போது பெருகி வரும் வேலையின்மையும், முற்றி வரும் பொருளியல் நெருக்கடி யும் மேலும் மேலும் தீவிரப் பட்டு வரும் சூழ்நிலையில், அவர்க ளுடன் பொருளியல் கூட்டு வைத்திருக்கும் இந்தியா செய்வத றியாது நிற்கிறது. “உலக மயத்தின் (பாதகமான)பின் விளைவுகளைத் தான் நாம் இன்று சந்திக்கிறோம்” என்று வெளிப்படை யாகவே கூறி னார், இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்.
முதலாளிய நிறுவனங்களின் சூதாட்டக் களமான பங்குச் சந்தைகளை உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் அலை யலையாக சென்று முற்றுகை யிட்ட இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். உல கெங்கும் பரந்து விரிந்துள்ள இந்த இயக்கம், வேலையின்மை, பெருநிறுவன ஆதிக்கம் ஆகிய முதலாளிய சந்தைப் பொருளி யலின் பின் விளைவு களை எதிர்த்து மட்டுமே கட்டமைக் கப்பட்டிருக்கிறது.
ஆயினும், இது ஒட்டுமொத்த சந்தைப் பொருளியலுக்கு எதிரானதாகவும், முதலாளியப் பொருளியலுக்கு மாற்றாக அந்தந்த நாட்டின் தன்மைக் கேற்ப மார்க்சியப் பொருளி யலை முன் வைப்பதாகவும் வளர்ச்சியடைந்தால் தான் உழைக்கும் மக்களின் இப் போர்க் குணமிக்கப் போராட் டங்கள் இறுதி வெற்றி அடையும்..
உங்களுடைய நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசரகால கடன் தேவை? நாம் வணிக கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், கொடுப்பனவு கடன்கள், திருமணக் கடன்கள், மாணவர் கடன்கள், கார் கடன்கள், வங்கி கடன்கள் மற்றும் கடன் செலுத்துவதற்கான கடன் ஆகியவற்றை வழங்குகிறோம். உங்கள் கெட்டதை அறியுங்கள்
ReplyDeleteகடன் ஸ்கோர். உங்களுக்குத் தேவையான கடன் தொகை உங்களுக்கு வழங்கப்படும். நாங்கள் பட்டியலிடப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான கடன்களையும் அங்கீகரிக்கிறோம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களை தொடர்பு மற்றும் இப்போது பொருந்தும்
சிறந்த பரிந்துரை
எம்.ஆர்: கிறிஸ்டியன் டேவிட் பாங்
infosun கடன் சேவை நிறுவனம்
தொடர்பு மின்னஞ்சல்: எங்களை: infosunloanservice24@gmail.com
WHATS-APP CONTACT +919108281664