Home
/
ஆர்ப்பாட்டம்
/
காவிரி உரிமை
/
செய்திகள்
/
போராட்டம்
/
நீதி செத்தது நெற்பயிர் சாவுது கண்டன ஆர்ப்பாட்டம்
நீதி செத்தது நெற்பயிர் சாவுது கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் 31.01.2013 அன்று மாலை 5 மணியளவில், தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் உழவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டண ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன் தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் தோழர் வழக்கறிஞர் நல்லதுரை , தமிழர் தேசிய இயக்கம் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவுனர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர் தமிழ்நேசன், இயற்க்கை தாழாமை உழவர் இயக்கம் நிறுவுனர் திருநாவுகரசு, தமிழக உழவர் முண்ணனி பொதுச்செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உழவர்களும் இதில் பங்கேற்றுனர்.
காவிரி உரிமைக் குழு ஒருகிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் நிறைவாக கண்டண விளக்கவுரையாற்றினார்.
(த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Leave a Comment