ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழகமெங்கும் தமிழ்த் தேசிய நாள் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது!


தமிழகமெங்கும் தமிழ்த் தேசிய நாள்  எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது!

1990 ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தி, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றிய தற்காக .தே.பொ.. தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மீது பிரிவினைத் தடைச் சட்டத்தை ஏவி சென்னை நடுவண் சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் .தே.பொ.. பின் வாங்கவில்லை. அன்றிலிருந்து தமிழர்களின் அரசியல், பொருளியல், மொழி உள்ளிட்ட பண்பியல் கூறுகளின் கொள்கல னாக கூர்மைப் படுத்தப்பட்ட இலட்சியமாகத் தமிழ்த் தேசியத்தை வளர்த்து வருகிறது.

அவ்வகையில் பிப்ரவரி 25 ஆம் நாளை தமிழ்த் தேசிய நாளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடைபிடிக்கிறது.

சென்னை :

சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலையில் காலை 8.45 மணியள வில், .தே.பொ.. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலை மையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை வடச் சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன் ஏற்றி வைத்தார். பின்னர் தோழர் உதயன், தமிழ்த் தேசிய நாளை பற்றி விளக்கி பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், ”எமது தேசிய இனம் தமிழர், யாம் இந்தியரும் இல்லை, திராவிடரும் இல்லை! எமது தேசிய மொழி தமிழ், இந்தியோ, ஆங்கிலமோ எமது தேசிய மொழி அல்ல! எமது தேசம் தமிழ்த் தேசம், இந்தியாவோ, திராவிடமோ எமது தேசமன்று!
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்குஎன்பன உள்ளிட்ட எழுச்சி முழக்கங்களை எழுப்பினார்.

இந்நிகழ்வில், நடுவண் சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் செந்தில், செயலாளர் தோழர் முத்துக்குமார், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் தலைவர் தோழர் அகத்தாய்வன், செயலாளர் தோழர் நல்லன்கோ உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை:
தஞ்சை .தே.பொ.. கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளர் தோழர் இராசு. முனியாண்டி தலைமையில் காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 2.30 வரை கோரிக்குளம், பூக்காரலாயம், அண்ணா நகர் முதல் தெரு, அண்ணா நகர் ஏழாவது தெரு, ரெங்கநாதபுரம், கருணாநிதி நகர் , வடக்குவாசல் ஆகிய பகுதிகளில் வாகணங்களில் சென்று .தே.பொ..கொடி ஏற்றினர் இன் நிகழ்வில் தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் காசிநாதன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இராமசாமி, தோழர் செயச்சந்திரன், தோழர் பாலகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

பின்பு மாலை 5.30 தஞ்சை முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய நாள் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் தேசிய இயக்கம் பொதுசெயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையேற்றார். பொறி. சோ. ஜான்கேன்னடி வரவேற்புரையாற்றினார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் ஐயா நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மன்மொழி ஆசிரியர் தோழர் இராசேந்திரசோழன் ,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரை, விடுதலைத் தமிழப் புலிகள் கட்சி நிறுவனர் தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட தோழர்கள் தமிழ்த் தேசிய நாள் குறித்து விளக்க உரையாற்றினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், வழக்கறிஞர் கரிகாலன், நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி, தமிழக உழவர் பொதுச்செயலாளர் காசிநாதன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் விசடுதலைசுடர் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

பூதலூர் :

.தே.பொ.. சார்பில் கொடியேற்றப்பட்டு  தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கைகள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கு.பால்ராசு தலைமையில் பூதலூர் ஒன்றியமான, வன்னியம்பட்டி, ஆச்சாம்பட்டி, பாலையப்பட்டி, நந்தம் பட்டி, காதாட்டிப்பட்டி, வலம்பக்குடி, மனையேறிப்பட்டி, வெண்டையம் பட்டி, திருவிழாப்பட்டி, புதுக்குடி நரிக்குறவர் காலனி, புதுக்குடி முதன்மைச் சாலை, காமாட்சி புரம், சமத்துவபுரம், தக்கனூர், நந்தவனப்பட்டி, .வி.. பட்டி, வீரப்புடையான் பட்டி, பூதலூர், புதுப்பட்டி, செங்கிப்பட்டி, சானூரப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கொடியேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் தோழர் காமராசு (ஒன்றியச் செயலாளர், .தே.பொ..) தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச் செயற்குழு, .தே.பொ..) தோழர் .காமராசு (தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர்) தோழர் .தேவதாசு (..மு. பூதலூர் ஒன்றியத் தலைவர்) தோழர்  தெட்சிணா மூர்த்தி (நடுவண் குழு உறுப்பினர், ..மு.) உள்ளிட்ட .தே.பொ.. தோழர்களும், ..மு. தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சிதம்பரம் :

சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் .தே.பொ.. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோதேவராசன் தலைமையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியை மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேள் அவர்கள் ஏற்றி வைத் தார்.
பின்னர் அங்கிருந்து காசுக்கடைத்தெரு, மேலவீதி, கொத்தவால் தெரு, உள்ளிட் டப் பகுதிகளில் தோழர்கள் பேரணியாக சென்று தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கைகளை பொதுமக்கள், வணிகர்களிடம் வழங்கி தமிழ்த் தேசிய நாளினைக் குறித்து விளக்கி பேசினர்.

இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி துணைப்பொதுச் செய லாளர் தோழர் .குபேரன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணியசிவா, தோழர்கள் பா.பிரபாகரன், மு.சம்பந்தம், .யவனராணி, செ.மணிமாறன், பா.கா.கார்த்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.

மாலை 4.30 மணி அளவில் தமிழக மாணவர் முன்னணி சார்பில் மாணவர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் தோழர் .தனராஜ் தலைமையேற்றார். தோழர் வே.சுப்பிர மணிய சிவா தமிழ்த் தேசிய நாள் குறித்தும், தமிழ்த் தேசிய அரசியல் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் புலம், வேளாண் புலம், வணிகவியல், பொருளி யல் மற்றும் தமிழ் உள்ளிட்ட கலைத்துறை மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்த் தேசிய நாளையொட்டி சிதம்பரம் நகரில்
எமது தேசிய இனம் தமிழர்!
எமது தேசிய மொழி தமிழ்!
எமது தேசம் தமிழ்த் தேசம்!
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு
என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் உணவாளர்கள், பொது மக்களி டையே பரவலான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாமிமலை :

சாமிமலை கோயில் சன்னதியின் காலை 10:00 மணியளவில் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையில், குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொடியேற்றி வைத்தார் .

இந்நிகழ்வில் .தே.பொ. தோழர்கள் .சிவகுமார், இர.சிவகுமார், .தீந்தமிழன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் கு.வெங்கடேசு, தமிழக மாணவர் முன்னனி அமைப்பளர் தோழர்கள் இர.அருள், கு.தமிழ்செல்வன், உள்ளிட்ட திரளா தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தேவராயன் பேட்டை :

தேவராயன் பேட்டை கடைவீதியில் காலை 12.00 மணிக்கு தமிழக இளைஞர் முன்னணி கொடியை கிளை தலைவர் தோழர் மனோகர் ஏற்றி வைத்தார், செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் கிளைத் தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

மதுரை:

மதுரை செல்லூர், தாகூர் நகரில் 25.02.2014 அன்று மாலை 6.00 மணியளவில் கொடியேற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு தோழர் ஆனந்தன் தலைமையில் மகளிர் ஆயம் தோழர் செரபினா கொடியேற்றினார்.

இக்கூட்டத்தில் மகளிர் ஆயம் தோழர் பே.மேரி, மக்கள் உரிமைப் பேரவை வழக்கறிஞர் சு. அருணாச்சலம், சித்திரை வீதி தானி ஓட்டுநர்கள் சங்கம், தோழர் இராசேந்திரன் , மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கின்றனர்.

தோழர் மு. அழகர்சாமி வரவேற்புரையாற்றினார். தோழர் . தியாகலிங்கம் நன்றி கூறினார்.

எழுச்சி முழக்கம் எழுப்பிய நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான தமிழின உணர் வாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி :

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இராமச்சந்திரா நகர் சாலை அருகில் தமிழ்த் தேசிய நாள் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தோழர் வே.பூ. இராமராஜ் தலைமையேற்றார். தோழர் மனுவேல்(.தே.பொ..) கொடியேற்றினார். திரு கதிரவன்( .தி.மு.. மாமன்ற உறுப்பினர்திரு பாஸ்கர் (ஈசுவரி டிடேரஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்கவிஞர் இராசாரகுநாதன் (..இபே.) தோழர் கவித்துவன் (மாநகரச் செயலாளர், .தே.பொ..) உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

தோழர்கள் கருப்புசாமி, முருகேசன், சத்யராக், வெங்கடாசலபதி, பட்டுராஜா, குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முருகன் குடி:

முருகன் குடி பேரூந்து நிலையம் அருகில் 25.02.2014 அன்று மாலை 6.00 மணீயளவில் கொடியேற்ற நிகழ்வு நடை பெற்றது.

தலைமைச் செயற்குழு தோழர் முருகன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் பழனிவேல் கொடியேற்றி உரை நிகழ்த்தினார். தமிழக இளைஞர் முன்னணி நடுவன் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சாத்துக்கூடலில் ..மு. சார்பில் தோழர்இளைய நிலா தலைமையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசிய நாள் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

ஓசூர்:

ஓசூர் பேருந்து நிலையம் கடைவீதியில், மாலை 05.00 மணிக்கு நகர செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையில், தமிழ்த்தேசிய நாள் பரப்புரை துண்டறிக்கை இயக்கம் நடைப்பெற்றது.

இப்பரப்புரை இயக்கத்தில்  தோழர்கள் முருகபெருமாள், சுப்பிரமணியன், முருகாணந்தம், செந்தில் மாறன், துரைராசு, தமிழ் மாறன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

புளியங்குடி :


புளியங்குடியில் தமிழ்த் தேசிய நாளை முன்னிட்டு 25.02.2014 அன்று மாலை 5.00 மணியளவில் காமராசர் சிலையிலிருந்து  வாகனப் பரப்புரைப் பயணம் நடைப்பெற்றது.

இப் பரப்புரை பயணத்திற்கு தோழர் .பாண்டியன் தலைமையேற்றார். உலகத்தமிழ்க் கழகம் மாநிலப் பொருளார் தோழர் நெடுஞ்சேரலாதன், முறம்பு பாவாணர் கோட்டத் தலைவர் தோழர் .இளங்கண்ணன், நாம் தமிழர் கட்சி மாவட்ட கலை இலக்கிய பேரவைத் தலைவர் தோழர் பசும்பொன், உலகத் தமிழிக் கழகம் மாவட்ட தலைவர் தோழர் செல்லத்துரை, .தே.பொ..தோழர்கள் காளியப்பன், மா.பழனிச்சாமி உள்ளிட்ட தோழர்களும் பொது மக்களும் பெருந் திரளாக கலந்துக் கொண்டனர்.

ஈரோடுகவிஞர் தோழர் சமர்ப்ப குமரன் குழுவினரின் கிராமிய பாடல்கள் இசையுடன் பரப்புரை நடைபெற்றது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.