ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள்!


இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

குடந்தை - பட்டீசுவரம்
தஞ்சை மாவட்டம் - குடந்தை வட்டம் - பட்டீசுவரத்தில் 07.08.2014 அன்று மாலை, கடைவீதியில் நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் தமிழ்த் தேசியன் தலைமையேற்கிறார். தோழர் ச.சுரேஷ் வரவேற்புரையாற்றுகிறார். திரு. இறைநெறி இமையவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திரு. பெ.பூங்குன்றன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை ஆகியோர் இதில் சிறப்புரையாற்றுகினர். தமிழக மாணவர் முன்னணித் தோழர் ம.புரட்சி நன்றியுரையாற்றுகிறார்.

சாமிமலை
தஞ்சை மாவட்டம் – குடந்தை வட்டம் – சாமிமலை, தேரடி அருகில், 08.08.2014 அன்று மாலை நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக்கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் ம.திருவரசன் தலைமையேற்கிறார். தோழர் த.சிவக்குமார் (த.தே.பொ.க) வரவேற்புரையாற்றுகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், தோழர் வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகினர். தமிழக மாணவர் முன்னணித் தோழர் கு.தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றுகிறார்.

குடந்தை
தஞ்சை மாவட்டம் - குடந்தையில், காந்தி பூங்கா அருகில் 09.08.2014 அன்று மாலை நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக்கூட்ட’த்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் தலைமையேற்கிறார். தோழர் செழியன் வரவேற்புரையாற்றுகிறார். திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தோழர் வளவன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் ஆகியோர் சிறப்புரையாற்றுகினர். தோழர் ரெ.அன்பழகன் (த.தே.பொ.க.) நன்றியுரையாற்றுகிறார்.
சென்னை
சென்னை எம்.ஜி.ஆர். நகர் முதன்மைச் சாலையில், 10.08.2014 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு, ‘சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ் வழிபாட்டுரிமைக் குழு அமைப்பாளரும், தெய்வத்தமிழ் இதழ் ஆசிரியருமான ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பே.சத்தியவேல் முருகனார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். சென்னை த.இ.மு. தலைவர் தோழர் செந்தில் நன்றி நவில்கிறார்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில், 10.08.2014 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.செம்பரிதி தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகி தோழர் கு.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

தஞ்சை
தஞ்சையில் 11.08.2014 திங்கள் அன்று மாலை 5 மணிக்கு, இரயிலடியில் நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றுகிறார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி, நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.

முருகன்குடி
கடலூர் மாவட்டம் – திட்டக்குடி வட்டம் முருகன்குடியில், 11.08.2014 அன்று மாலை 5 மணிக்கு, பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முருகன்குடி செயலாளர் தோழர் கனகசபை தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றகின்றனர்.

செங்கிப்பட்டி
தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில், 12.08.2014 அன்று மாலை நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ.தேவதாசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் ச.காமராசு, தோழர் தட்சிணாமூர்த்தி, தோழர் க.அருள்தாசு, தோழர் ஆ.இராசசேகர், தோழர் பொன்.இரவிச்சந்திரன், தோழர் த.செபஸ்டியார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ப.மலைத்தேவன் நன்றியுரையாற்றுகிறார்.

சிதம்பரம்
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகில், 13.08.2014 அன்று மாலை 6 மணிக்கு, தமிழ்க் காப்பணி சார்பில், ‘சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்க் காப்பணி ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்கிறார். தமிழ்க் காப்பணி துணைச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ் காப்பணி பொதுச் செயலாளர் திரு. பா.பழநி, துணைத் தலைவர் திரு. இராம.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திரு. இறைநெறி இமையவன், தமிழ்க் காப்பணி தலைவர் திரு. அழ.பழநியப்பன், அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜானந்தா ஆய்வு மைய நிர்வாகி திரு. அன்பாநந்தன், அக்னி சிறகுகள் சேவை அமைப்புச் செயலாளர் திரு. வே.சுப்பிரமணிய சிவா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். திரு. மு.சம்பந்தம் நன்றியுரையாற்றுகிறார்.

திருச்சி
      திருச்சியில் 13.08.2014 – அறிவன்(புதன்) அன்று மாலை 5.30 மணிக்கு, சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரவி சிற்றரங்கில், ‘சமற்கிருத ஆதிக்கமும் தமிழக பாதிப்புகளும்’ என்ற தலைப்பில்,  கருத்தரங்கம் நடைபெறுகின்றது. உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்நிகழ்விற்கு, த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா.இராசா ரகுநாதன் தலைமயேற்கிறார். த.க.இ.பே. துணைச் செயலாளர் பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி வரவேற்புரையாற்றுகிறார். பொறியாளர் ப.மாதேவன், தோழர் மூ.த.கவித்துவன், பைந்தமிழ் இயக்கப் புலவர் பழ.தமிழாளன் ஆகியோர் பாவரங்கம் நிகழ்த்துகின்றனர். உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள், “சமற்கிருத ஆதிக்கமும் தமிழர் மெய்யியலும்” என்ற தலைப்பிலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், “சமற்கிருத ஆதிக்கமும் தமிழ் இனமும்” என்ற தலைப்பிலும், முனைவர் அ.அந்தோணி குரூசு அவர்கள் “சமற்கிருத ஆதிக்கமும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றுகின்றனர். நிறைவில், தோழர் மு.தியாகராசன் நன்றியுரையாற்றுகிறார்.

இதே போல்,மதுரை, ஈரோடு, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துண்டறிக்கை பரப்புரை உள்ளிட்ட நிகழ்வகள் நடைபெறுகின்றன.

தமிழகமெங்கும் நடைபெறும், “சமற்கிருத எதிர்ப்பு வார” நிகழ்வுகளில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.