உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு! சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு! அநீதியாக சிறைவைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் - மாணவர்களை உடனடியாக விடுதலை செய்! சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், தமிழ்த் தெரிந்த நீதிபதிகளையே சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்த வேண்டும், உரிமைப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் - மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்று (07.10.2015), மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் முன்னணித் தலைவர் தோழர் அரங்க. குணசேகரன் தலைமையேற்றார். உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக்குழு வழக்கறிஞர் கோ. பாவேந்தன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், மக்கள் வழக்கறிஞர் சங்கர சுப்பு, தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, த.பெ.தி.க. வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் கரு. அண்ணாமலை, தி.வி.க. வழக்கறிஞர் அருண், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பாவலர் தமிழேந்தி, தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ரசினிகாந்த், மொழியுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆழி. செந்தில்நாதன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் பிரபாகரன், இரமேசு, கவியரசன், பாலசுப்பிரமணியன், வடிவேலன், செழியன், சக்திவேல், சத்தியா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.
Leave a Comment