ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நெய்வேலி புத்தகத் திருவிழாவில்.. தமிழ்த் தேசிய வெளியீடுகள்..! அரங்கு எண் - 143. வாருங்கள் தோழர்களே...!!!

நெய்வேலி புத்தகத் திருவிழாவில்.. தமிழ்த் தேசிய வெளியீடுகள்..! அரங்கு எண் - 143. வாருங்கள் தோழர்களே...!!!
நெய்வேலியில், கடந்த 30.06.2017 தொடங்கி நடைபெற்று வரும் மாபெரும் புத்தகத் திருவிழாவில், தமிழ்த் தேசிய நூல்கள் ஒருங்கிணையும் நூல் அரங்காக, அரங்கு எண் 143 -இல் நமது நூல் அரங்கு அணிமாகியுள்ளது.

காவ்யா பதிப்பக நூல் அரங்கில், தோழர் பெ. மணியரசன், தோழர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் எழுதிய தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் வெளியீடுகளும், பன்மைவெளி வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப் புத்தக திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில், வார நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. பல்வேறு தலைப்புகளில் இலட்சக்கணக்கான நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களும் கழிவு விலையில் நூல்கள் கிடைக்கின்றன.

தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகளுடன், அரங்கு எண் 145இல் வைக்கப்பட்டுள்ள நூல்கள் - உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்! வாருங்கள் !

அரங்கு எண் – 143
காவ்யா - பன்மைவெளி நூல் அரங்கில்..!!!

பன்மைவெளி வெளியீட்டகம்
https://www.facebook.com/panmaiveli
www.panmaiveli.com
பேச: 98408 48594, 94439 18095

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.