ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கொலைகாரர்கள் மீது தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடு!

 


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கொலைகாரர்கள்

மீது தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடு! 

=======================================

குடந்தையில் விளக்கத் தெருமுனைக் கூட்டம்!

=======================================


தூத்துக்குடியில் வடநாட்டு மார்வாடி அனில் அகர்வாலின் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது 2019 மே 22 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு அமர்த்திய நீதிபதி அருணா செகதீசன் அவர்களின் அறிக்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 


கடந்த 18.05.2022 அன்று இவ்வறிக்கை தி.மு.க. அரசிடம் அளிக்கப்பட்டும்கூட, அதை இன்றுவரை வெளியிடாமல் தி.மு.க. அமைதி காக்கிறது. அவ்வறிக்கையை தமிழ்நாடு அரசு முறைப்படி வெளியிட்டு, அவ்வறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் கொலை, கொலைக்குத் தூண்டுதல், கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாத்தல் முதலிய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும். 


இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 26.08.2022 அன்று குடந்தையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகிறது. 


குடந்தை காந்தி பூங்கா அருகில் வரும் வெள்ளி (2022 ஆகத்து 26) மாலை 6 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமை தாங்குகிறார். குடந்தை த.தே.பே. மாநகரச் செயலாளர் தோழர் செழியன் முன்னிலை வகிக்கிறார். 


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, சாமிமலை கிளைச் செயலாளர் தோழர் க. தீந்தமிழன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். திருவலஞ்சுழி கிளைச்செயலாளர் தோழர் கி. பிரபாகரன் நன்றி கூறுகிறார். 


இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 


=====================================

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

=====================================

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.