ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழக உழவர் முன்னணி – பட்டீச்சுரம் கிளை கலந்தாய்வுக் கூட்டம்
 தமிழக உழவர் முன்னணி – பட்டீச்சுரம் கிளை கலந்தாய்வுக் கூட்டம்

================================================

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீச்சுரம் ஊராட்சியில் 14.9.2022 அன்று மாலை 7:00 மணியளவில் சிறீ இராமகிருட்டிணமகாலில் தமிழக உழவர் முன்னணி பட்டீச்சுரம் கிளை கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு பட்டீச்சுரம் கிளைத் தலைவர் திருமேற்றழிகை சேகர் அவர்கள் தலைதாங்கினார். பொருளாளர் செழியன் அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் நிகழ்வை செயலாளர் ம.தூயவன் ஒருங்கிணைத்தார். முன்னதாக தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் மு.தமிழ்மணி அவர்களின் மகன் முத்தமிழ் இறப்பிற்கு ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 


நிகழ்வின் தொடக்க உரையாக குடந்தை பகுதியின் தமிழக உழவர் முன்னணி அமைப்பாளர் தோழர்.க.விடுதலைச்சுடர் தமிழக உழவர் முன்னணியின் அறிமுகம் மற்றும் நோக்கம், செய்த போராட்டங்கள், வெற்றிகள் பற்றி விளக்கினார்.


தமிழ்க்கலை இலக்கியப் பேரவையின் மூத்த ஐயா பெ.பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் அடுத்த நிகழ்வாகா பட்டீச்சுரம் கிளையின் கடந்தா கால செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. 


ஆதனூர் தமிழக உழவர் முன்னணி செயல்பாட்டாளர் திருஞானம் அவர்கள் உர விலையேற்றம் குறித்தும், சம்பா நடவில் அரசு அறிவித்த கடன் விபரம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்தும் விளக்கினார். 


பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக பி.முருகானந்தம் கீழப்பழையார், துணைச் செயலாளராக டி.ரெத்தினசங்கர், துனைப் பொருளாளராக முழையூர் பி.பாஸ்கர், செயற்குழு உறுப்பினராக கோ.அன்புச்செழியன், ஆர்.கோபி, எஸ்.கே.அன்பழகன், கோபிநாத பெருமாள் கோயில் மாரியப்பன், நந்தன்மேடு காமராஜ், கா.மதிவாணன், குமார்.ப, தேனாம்படுகை து.சரவணன், ம.இராசேந்திரன், தென்னூர் குமார் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். 

இக்கூட்டத்திற்கு சாமிமலை பகுதி அமைப்பாளர் க.தீந்தமிழன், பட்டீச்சுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேரந்த திரளான உழவர்கள் கலந்துகொண்டனர். 


மேற்படி கூட்டத்தில் 2022, செப்டம்பர் 19 ஆம் நாள் மாலை 5:00 மணிக்கு ஏற்கெனவே ஒத்தி வைக்கப்பட்ட  ஆர்ப்பாட்டம் (உரக்கடைகள் உழவர்களுக்கு தேவையில்லாத கூடுதல் உரங்களை வாங்கச்சொல்லுதல், செயற்கையான உரத் தட்டுப்பாடு போன்ற காரணங்கள்) நடத்துவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.