செங்கிப்பட்டி சானடோரியம் காசநோய் (TB ) மருத்துவமனையை மாவட்டப் பொது மருத்துவமனை ஆக்குக !
தமிழ்நாடு அரசே ! செங்கிப்பட்டி சானடோரியம் காசநோய் (TB ) மருத்துவமனையை மாவட்டப் பொது மருத்துவமனை ஆக்குக !
செங்கபட்டியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் =============================================================== தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி சானடோரியம் காசநோய் (TB ) மருத்துவமனையை மாவட்டப் பொது மருத்துவமனை ஆக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி (சானூரப்பட்டி) செங்கிபட்டி கடை வீதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்ஆர்ப்பாட்டத்திற்கு த. தே.பே பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி தலைமை தாங்கினார். பூதலூர் ஒன்றிய செயலாளர் பி.தென்னவன், பொதுக்குழு உறுப்பினர் க.காமராசு முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் நா.வைகறை கோரிக்கை உரை நிகழ்த்தினார் .தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பழ.இராசேந்திரன் க.விடுதலைச் சுடர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.பாலன் ஒன்றியகுழு தோழர்கள்,ச.அருள்தாசு பழ.மலை தேவன் பெ.ஆனந்த சே.மணியரசன் ச.செபஸ்தியார் ச.சுரேசு உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் திரளாக பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டனர். ===================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
Leave a Comment