ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இதழ் தொடர்பாக ஒரு பகிர்வு

இதழ் தொடர்பாக ஒரு பகிர்வு


 

அன்புகெழுமிய வாசகப் பெருமக்களே,


தமிழர் கண்ணோட்டம் தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இதழின் வெளியீட்டாளராக இருந்த தோழர் அ.பத்மநாபன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து 17.3.2008 மடல் வழி விலகி வெளியேறிவிட்டார். இதன் மூலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்  கட்சி நடத்திவரும் தமிழர் கண்ணோட்டம் இதழிலிருந்தும் அவர் வெளியேறிவிட்டார் என்று பொருளாகும். இது குறித்த அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் இதழில் வெளியிட்டிருந்தோம்.

 

இதழைப் பதிவு செய்தபோது, பதிவுத் தேவைகருதியும், தோழர் பத்மநாபன் மீது கட்சி வைத்திருந்த நம்பிக்கையைப் பொறுத்தும் அவøர வெளியீட்டாளராகப் பதிவு செய்தோம். த.தே.பொ.க.வை விட்டுப் போய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து விட்டதாகக் கடிதம் மூலமும் நேர்முகமாகவும் அவர் தெரிவித்தார். போகும்போது தமிழர் கண்ணோட்டம் பதிவு தொடர்பான மூல ஆவணங்களை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

 

பத்மநாபனைத் தொலைபேசி வழிக் கேட்டபோது ""எல்லாம் அங்கு அலுவலகத்தில் தான் இருக்கின்றன'' என்றார். பிறகு நம் தோழர்கள் அவரிடம் பேசியபின், அவ÷ர முன்வந்து அந்த  மூலஆவணங்களைத் தம் வீட்டிலிருந்து 24.3.2008 அன்று எடுத்துவந்து தமிழர் கண்ணோட்டம்/ தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகத்தில் என்னிடம் ஒப்படைத்தார். நான் பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் போட்டுக் கொடுத்தேன். தவறுதலாக மற்ற பொருள்களோடு சேர்ந்து இந்த ஆவணங்களும் தம் வீட்டுக்கு வந்து விட்டதாக அப்போது அவர் சொன்னார்.
 

அத்துடன் வெளியீட்டாளர் பொறுப்பை கட்சியின் முடிவுப்படி என் பெயருக்கு (பெ.மணியரசன்) மாற்றித் தருவதாகவும் சொன்னார். ""இருபது ரூபாய் முத்திøரத்தாளில் அதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தைத் தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள் கையொப்பமிட்டுத் தருகிறேன். நீதிமன்றத்திற்கு வரவேண்டிய நாளைத் தெரிவியுங்கள், வந்து அங்கும் நேரடியாக ஒப்புதல் தெரிவித்து விடுகிறேன்'' என்று சொன்னார்.

 

மகிழ்ச்சியாகப் பேசி விடைபெற்றுச் சென்றார். அப்போது அலுவலகத்தில் இருந்த மற்ற தோழர்களுக்கு அவரது இச் செயல் வியப்பளித்தது.  ஆனால் 17.4.2008 அன்று கட்சியின் தஞ்சை மாவட்ட

அலுவலக முகவரிக்குப் பத்மநாபனிடமிருந்து கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் சென்னையில் இருந்தேன். அதில் ""தமிழர் கண்ணோட்டத்தின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து பெ.மணியரசனை நீக்கிவிட்டு, தணிகைச் செல்வனை புதிய ஆசிரியராக நியமித்துள்ளேன்'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அ.பத்மநாபன் அனுமதி இல்லாமல் தமிழர் கண்ணோட்டம் தொடர்பான எப்பணியிலும் பெ.மணியரசன் ஈடுபடக் கூடாது என்றும் எழுதியிருந்தார்.

 

அதன்பிறகு பத்மநாபன் த.தே.பொ.க. தோழர்கள் சிலர்க்கு அடிக்கடி தொலைபேசி வழி தமது முயற்சிகளை ஒன்றுவிடாமல் கூறிவருகிறார். இராசேந்திரசோழன், தணிகைச் செல்வன், அ.பத்மநாபன் மூவரும் தமிழர் கண்ணோட்டத்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

 

2005 அக்டோபர் மாதம் த.தே.பொ.க.விலிருந்து வெளியேறியவர் இராசேந்திரசோழன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் த.தே.பொ.க.வுடன் ஆன அமைப்பு வழித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டவர் தணிகைச் செல்வன். அவ்விருவரும் கட்சியை விட்டுப் போனபின் அவர்கள் வழியில் நாம் குறுக்கிட்டதே இல்லை. அவர்கள் இருவரும், த.தே.பொ.க. தலைமை குறித்த, எவ்வளவோ, கொச்சையாகக் குற்றம் கூறி எழுதினார்கள். அதற்குக் கூட நாம் எதிர்வினை புரியவில்லை. இவர்கள் மூவரும் த.தே.பொ.க. தலைமை மீதுள்ள தங்களின் சொந்தக் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி வாங்கும் நோக்கில் ஒரு "தொழில்நுட்பக்' காரணத்தைப் பயன்படுத்தி, தமிழர் கண்ணோட்டம் இதழை முதலில் அபகரித்து, பின்னர் நிரந்தரமாக முடக்கிவிடத் திட்டமிடுகிறார்கள்.

 

தமிழர் கண்ணோட்டம் எனக்கோ அல்லது வேறு எவருக்குமோ தனிப்பட்ட சொத்து அல்ல. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற ஓர் இலட்சிய இயக்கத்தின் சொத்து. த.தே.பொ.க. எம்.சி.பி.ஐ. என்ற பெயரில் செயல்பட்ட போது ""கண்ணோட்டம் எம்.சி.பி.ஐ. செய்தி மடல்'' என்ற பெயரில் என்னைஆசிரியராகக் கொண்டு சிதம்பரத்திலிருந்து 1986 சனவரியில் உருட்டச்சு (÷ரானியோ) இதழாக முதல் முதல் வெளிவந்தது. அவ்விதழ் இன்று உள்ளடக்கம், உருவம், வாசகர் ஆதரவு ஆகியவற்றில் அடைந்துள்ள வளர்ச்சிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. த.தே.பொ.க. தோழர்களின் சலியாத உழைப்பும், கட்சிக்கு வெளியே உள்ள ஆதரவாளர்களின் கொள்கை சார்ந்த அரவணைப்பும் உதவியும் தாம் இவ்வளர்ச்சிக்குக் காரணங்கள். தமிழர் கண்ணோட்டத்துக்கு ஆசிரியர் வெளியீட்டாளர் என்பதெல்லாம் கட்சி கொடுத்த பொறுப்பு அல்லது வேலை தவிர வேறல்ல. எங்களில் யாருக்கும் தனிப்பட்ட உரிமை அவ்விதழில் இல்லை.

 

நம்பிக் கொடுத்த ஒரு வேலையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர் கண்ணோட்டத்தைத் தனதாக்கிக் கொள்ள பத்மநாபன் முயல்வதும், அதற்கு இராசேந்திரசோழன், தணிகைச் செல்வன் போன்றோர் துணைபோவதும் அறங்கொன்ற செயலாகும். ""வாயில் காத்துநிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும் கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும்'' என்ற பாரதி வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றன. பிறர் உழைப்பைச் சுரண்டுவதும் திருடுவதும் முதலாளி வர்க்கக் குணம். மார்க்சியம் பேசிக் கொண்டிருந்த இத் தோழர்கள் த.தே.பொ.க. என்ற மக்கள் இயக்கத்தின் சொத்தைத் திருடி உள்ளார்கள். பத்மநாபன் கட்சியை விட்டுப் போனா÷ர தவிர அவ÷ராடு யாரும் த.தே.பொ.க.விலிருந்து போகவில்லை. திருட்டு உரிமையை நிலைநாட்டிக் கொள்ள அ.பத்மநாபன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். அதுகுறித்து அவரது வழக்குøரஞரிட மிருந்து எனக்கு ஓர் அறிவிப்பும் வந்துள்ளது.

 

தமிழர் கண்ணோட்டம் குறித்துத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒரு முடிவு எடுத்துள்ளது. நீதிமன்றத்தில் முடிவாகும் வøர இனி ""புதிய தமிழர் கண்ணோட்டம்'' என்ற பெயரில் இதழைத் தொடர்ந்து நடத்துவது என்பதே அம்முடிவு.

 

அன்புமிக்க வாசகப் பெருமக்களே,

சிலர் இதழின் பெயøரத் திருடலாம்; இலட்சியத்தைத் திருடமுடியாது; தமிழர் கண்ணோட்டம், தற்சார்புள்ள புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தை தனிச்சிறப்பான பாதையில் வளர்த்து வருகிறது. அந்தத் தத்துவப் பயணம் மேலும் மெருகேறித் தொடரும். பணம், பதவி, தற்புகழ்ச்சி மூன்றுக்கும் சோரம் போகாத த.தே.பொ.க. தோழர்களே இவ்விதழின் அடித்தளம்.
 
"தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை' சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள அமைப்பாகும். அதன் நிறுவனத் தலைவர் நான் (பெ.மணியரசன்). அதன் பெயரில் சென்னைத் தியாகராயர் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் சேமிப்புக் கணக்கு உள்ளது. எனவே வழக்கம்போல் நீங்கள் ""தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை'' என்ற பெயரில் இதழுக்கான தொகைகளை வøரவோலை, காசோலை பணவிடை வழி இப்பொழுதுள்ள முகவரிக்கே அனுப்புங்கள். அறிவார்ந்த வாசகப் பெருமக்களாகிய உங்கள் ஆதரவு, இப்பொழுது முளைத்துள்ள சில்லøரச் சிக்கல்களைத் தவிடு பொடி ஆக்கிவிடும்.

 

நன்றி

பெ.மணியரசன்
ஆசிரியர்/ வெளியீட்டாளர்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.