ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

புதிய தமிழர் கண்ணோட்டம் சூன் மாத 2008 இதழ் - அறிவிப்பு

அறிவிப்பு
1000 புதிய உறுப்பினர் (சந்தாதாரர்) சேர்க்கும் முனைப்பியக்கம்

"புதிய தமிழர் கண்ணோட்டம்" இதழின் சூன் 2008 மாத இதழில் உள்ள கட்டுரைகள் சில மட்டுமே ஒருங்குறியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மற்ற பிற கட்டுரைகளை இதழ் வடிவத்திலேயே காண கீழ்க்காணும் முகவரியில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


புதிய தமிழர் கண்ணோட்டத் துக்கு 1000 புதிய உறுப்பினர் (சந்தாதாரர்) சேர்க்கும் முனைப்பியக்கம் தொடங்கி யுள்ளது.
சிதம்பரத்தில் 5,6.4.2008 நாள்களில் நடந்த பொதுக்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே தமிழ்காக்கப் போராடிய தோழர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து 3.5.2008 அன்று சென்னையில் நடந்த உண்ணாப் போராட்டம், மண்ணின் மக்களுக்கு வேலை கோரி 20.5. 2008 அன்று திருவெறும்பூர் மிகுமின் ஆலை முன் நடந்த மறியல் போராட்டம் மற்றும் ஆங்காங்கே நடந்த பகுதி இயக்கங்கள் காரணமாக உறுப்பினர் சேர்ப்பு முனைப்பு இயக்கம் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இப்பொழுது 1000 உறுப்பினர் சேர்ப்பு முனைப் பியக்கம் தொடங்கிவிட்டது. 2008 சூன் 30க்குள் 1000 உறுப்பினர் சேர்த்து முடிக்க வேண்டும்.
ஆண்டுக் கட்டணம் ரூ.120,
மூன்றாண்டுக்கட்டணம் ரூ. 300,
வாழ்நாள்கட்டணம் ரூ.1200
"தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை" என்ற பெயரில் பணவிடை, வரைவோலை அனுப்பலாம்.
தமிழ் இனத்தின் தற்காப்புக் கவசமாய், தமிழ்த் தேசியப் புரட்சியின் போர்வாளாய் வந்து கொண்டிருக்கும்
புதிய தமிழர் கண்ணோட்டத்தின் காவலராய் செயல்பட்டு இலக்கை விஞ்சி உறுப்பினர் சேர்க்குமாறு தோழமையோடு வேண்டுகிறோம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.