ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கியதாக திராவிடர் விடுதலைக் கழக சென்னை – சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால் முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரி, சென்னையில் இன்று (25.11.2013) மாலை 3.00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பா.புகழேந்தி தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஆர்.எம்.அனிபா, இந்திய தேசிய லீக் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தடா.ஜெ.அப்துல் ரகீம், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிலாளர் அமைப்புச் செயலாளர் தோழர் சைதை கு.சிவராமன், தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், மூத்த பத்திரிக்கையாளர் தோழர் டி.எஸ்.எஸ்.மணி, தோழர் அமலன் (கலகம்) உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் ,சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
P1130163
P1130167
P1130168
P1130176
P1130185
P1130196
P1130199
P1130201
P1130203
P1130205
P1130213


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.