ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

செங்கொடிமீடியா டாட் காம் புதிய இணைய தளம் கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்!


செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஆன் லைன் வர்த்தகம் நாளுக்க நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும், ஆன் லைன் வர்த்தகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமையாதது.

இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. தமிழர் நலன் சார்ந்து உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் புத்தகங்கள், ஆவணப்படம்-குறும்பட டிவிடிகள் இந்த இணைய தளத்தில் அறிமுகப்படுத்தப் பட்டு, விற்பனை செய்யப்படும்.

sengodimedia.com இணைய தளத்தில் இடம்பெறும் புத்தகங்கள் மற்றும் டிவிடிகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைப் பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விரைவாக தங்களுக்கு வேண்டிய புத்தகங்கள் மற்றும் டிவிடிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் sengodimedia.com இணைய தளத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அத்துடன் “தமிழர் நலனை முன்னிறுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் புதிய முயற்சி இது” என்று பாராட்டினார். இந் நிகழ்வில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் இந்த இணைய தளத்தில் கட்டுரைகள், கதைகள் உள்ளிட்டப் படைப்புகளும் இடம்பெறுவதால் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளை senkodimedia@gmail.com அல்லது info@sengodimedia.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.