ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி முருகன்குடியில் மிதிவண்டி பரப்புரை..!
அரசுப் பள்ளிகளில் தமிழை அப்புறப்படுத்தி ஆங்கிலவழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்தும், தமிழ்வழிக் கல்வி கோரியும், தமிழக இளைஞர் முன்னணி - தமிழக மாணவர் முன்னணி சார்பில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் - முருகன்குடியில் 13.07.2014 அன்று மிதிவண்டிப் பரப்புரை இயக்கம் சிறப்புற நடைபெற்றது.

முருகன்குடி பேருந்து நிலையத்தில், காலை 10 மணிக்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையில் துவங்கியது. ஆசிரியர் 
பழனிவேலு பரப்புரை இயக்கத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், முருகன்குடி கிளைச் செயலாளர் தோழர் அர.கனகசபை, பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி, தமிழக மாணவர் முன்ணணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மா.மணிமாறன், தோழர்கள் இரா.சுப்பிரணமயின், இரா.அறிவுச்செல்வன், மு.பொன் மணிகண்டன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் மு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். 

முருகன்குடியில் துவங்கிய இம்மிதிவண்டிப் பரப்புரை இயக்கம், வெண்கரும்பூர், நந்தப்பாடி, காரையூர், பெ.பூவனூர், ஓ.கீரனூர், அரியராவி, பெண்ணாடம், மாளிகைக்கோட்டம், சின்னக்கொசப்பள்ளம், பெரிய கொசப்பள்ளம், துறையூர் ஆகிய பகுதகளின் வழியாகச் சென்று, முருகன்குடியில் மாலை நிறைவடைந்தது. ”அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்காதே!” - "ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை எல்லாக் கல்வியும் தமிழில் வழங்கு" என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை, பரப்புரையில் கலந்து கொண்ட தோழர்கள் எழுப்பினர். 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.