ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

‘வெளியார் அதிகரிப்பும்தமிழர் வாழ்வுரிமையும்’சிறப்பு மாநாடு!

சென்னையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தும், ‘வெளியார் அதிகரிப்பும்தமிழர் வாழ்வுரிமையும்’சிறப்பு மாநாடு! செப்டம்பர் 28 - ஞாயிறு - காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், செப்டம்பர் 28 – ஞாயிறு அன்று, சென்னையில், ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பில், சிறப்பு மாநாடு நடைபெறுகின்றது.

சென்னை தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளித் திடலில், காலை முதல் மாலை வரை முழுநாள் நிகழ்வாக நடைபெறுகின்ற இச்சிறப்பு மாநாட்டில், தமிழகத்தில் வெளியார் குடியேற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், தாக்கங்களையும் பல்வேறு அறிஞர் பெருமக்களும், அமைப்புத் தலைவர்களும் எடுத்துரைக்கின்றனர்.

வரவேற்பு

காலை 9.30 மணிக்கு, ஒரத்தநாடு கோபு குழுவினரின் எழுச்சி இசையுடன், மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றுகிறார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை மாநாட்டு அறிமுக உரை நிகழ்த்துகிறார்.

முதல் கருத்தரங்கம்

அதன் பின்னர், ‘தொழில் வணிகத்தில் வெளியார்’ என்ற தலைப்பில், மாநாட்டின் முதல் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் சங்க அமைப்பாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், ஈரோடு த.தே.பே. நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், மகளிர் ஆயம் தோழர் ம.இலட்சுமி ஆகியோர் கருத்தரங்கிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.

‘திரைத்துறையில் அயலார்’ என்ற தலைப்பில், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம், ‘கட்டுமானத்துறையில் அயலார்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மூத்தப் பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறியாளர் அ.வீரப்பன், ‘மொத்த வணிகத்தில் அயலார்’ என்ற தலைப்பில், வினையம் – தமிழர் தொழில் வணிகப் பெருமன்றத் தலைவர் பொறியாளர் வெ.சேனாபதி, ‘பொன் நகை மற்றும் மரவேலையில் அயலார்’ என்ற தலைப்பில், புதுச்சேரி மரச்சிற்பி திரு. தே.சரவணன் ஆகியோரும் உரை நிகழ்த்துகின்றனர்.

கலை நிகழ்வுகள்

பிற்பகல் 1 மணிக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வழங்கும் ‘எங்க இடம் உள்ளே வராதே’ என்ற நாடகம் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில், சிறுவர் உரையரங்கம் நடைபெறுகின்றது.

பாவீச்சு

பிற்பகல் 2 மணிக்கு, பாவலர்கள் பங்கேற்கும் பாவீச்சு நடைபெறுகின்றது. ‘அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க’ என்ற தலைப்பில், பாவலர் கவிபாசுகர், ‘பாட்டாளித் தேசியம்’ என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, ‘கொடி உயக் கோன் உயரும்’ என்ற தலைப்பில் பாவலர் இராசாரகுநாதன், ‘நாம் வாழும் நாடு நமது என்பதறிந்தோம்’ என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

இரண்டாடம் கருத்தரங்கம்

பிற்பகல் 3 மணிக்கு, மாநாட்டின் இரண்டாம் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. திருத்துறைப்பூண்டி த.தே.பே. ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் இரா. கோவிந்தசாமி, கோவை த.தே.பே. செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், தமிழக உழவர் முன்னணி இராயக்கோட்டை பகுதிச் செயலாளர் தோழர் தூ.தூருவாசன் ஆகியோர் கருத்தரங்கிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.

‘தொடர்வண்டித்துறையில் வெளியாரும் சமூகநீதி மறுப்பும்’ என்ற தலைப்பில் திராவிட முன்னேற்ற மக்கள்க் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.ஞானசேகரன், ‘அரசியல் – பண்பியல் துறைகளில் வெளியார் தாக்கம்’ என்ற தலைப்பில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், ‘மக்கள் தொகையில் வெளியார் ஏற்படுத்தும் மாற்றம்’ குறித்து, தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, ‘நிதியகங்களில் வெளியார்’ என்ற தலைப்பில் தோழர் ம.பிரிட்டோ ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வுகளை, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.இளங்குமரன் ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.

பொது அரங்கம்

மாநாட்டின் இறுதி நிகழ்வாக நடைபெறும் பொது அரங்கிற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்கிறார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்செந்தூர் மு.தமிழ்மணி, தோழர் நெல்லை க.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் ம.செயப்பிரகாசு நாராயணன், ஓவியர் வீரசந்தனம், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், நிறைவுரையாற்றுகிறார்.

நிறைவில், வடசென்னை த.தே.பே. தோழர் தமிழ்ச்சமரன் நன்றியுரையாற்றுகிறார். மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் காலை முதல் மாலை வரை, கண்ணோட்டம் இணைய இதழில் (www.kannotam.com) நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. மாநாட்டிற்கு ஆதரவுத் திரட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்புரை இயக்கங்களும், சுவரெழுத்து – சுவரொட்டிப் பரப்புரைகளும் நடைபெற்று வருகின்றன.

ஊடகத்தினருக்கு வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராக நடைபெறும் இம்மாநாட்டின் இறுதியில், பல முக்கியத் தீர்மானங்களும் போராட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட இருக்கின்றன. எனவே, மாநாட்டிற்கு, ஊடகத்தினர் திரளாக வந்திருந்து மாநாட்டு நிகழ்வுகள் மற்றும் தீர்மானங்களைப் பெற்று, அதை உரிய முறையில் தங்கள் ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயலகம் வேண்டுகோள் விடுக்கிறது.

மாநாட்டிற்கு வருகை தரவுள்ள ஊடகத்தினர், தங்கள் வருகையை முன்கூட்டியே உறுதி செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு தீர்மான நகல்களும், அரங்கிற்கு முன் இருக்கைகளும், மின் இணைப்பு வசதிகளும் ஒதுக்கித்தர இசைவாக இருக்கும். எனவே, ஊடகத்தினர் தங்கள் வருகையைத் தெரிவிக்க முன்கூட்டிய தெரிவிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (தொடர்பு : 9841949462, 7667077075)


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.