ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சென்னையில் ஓவியர் புகழேந்தியின் புரட்சியாளர் “சே குவேரா” ஓவியக் காட்சி!





சென்னையில், ஓவியர் புகழேந்தியின் புரட்சியாளர் சே குவேராவின் ஓவியங்களைக் கொண்ட “புரட்சியின் நிறம்” தலைப்பிலான ஓவியக்காட்சி, செப்டம்பர் 8 முதல் 13 வரையில் நடைபெறுகின்றது.

இதன் தொடக்க நிகழ்வு, சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப்பள்ளியில், இன்று (8.09.2015) மாலை நடைபெற்றது. இன்று முதல், செப்டம்பர் 13 வரை, 6 நாட்கள் நடைபெறும் இவ் ஓவியக் காட்சியில், புரட்சியாளர் சே குவேராவின் பல்வேறு கோண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஓவியக்காட்சியை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மூத்தத் தலைவர் தோழர் தா. பாண்டியன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், நடிகர் சத்தியராஜ், ஊடகவியலாளர் திரு. ஞாநி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓவியர் கு. புகழேந்தி வரவேற்றார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தோழர் கவிபாஸ்கர், தோழர்கள் கவியரசன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும், இவ் ஓவியங்களைக் காணும் வகையில், நாளை முதல், நாள்தோறும், காலை 10 மணி முதல், மாலை 8 மணி வரையிலும், ஓவியங்களைப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.