“எங்களுக்காகவும் பேசுங்கள்” கண்டுகொள்ளப்படாத பொழிச்சலூர் துயரம்!
“எங்களுக்காகவும் பேசுங்கள்” கண்டுகொள்ளப்படாத பொழிச்சலூர் துயரம்!
வெள்ளக் குப்பையை சுத்தம் செய்யக் கோரிய பொழிச்சலூர் விநாயகா நகர் பெண்கள் மீது காவல்துறையினரின் மனிதநேயமற்ற தாக்குதல்!
அம்பலப்படுத்தும் பிரத்தியேக குறும்படம்! ஆயிரமாயிரமாய் பகிருங்கள் தோழர்களே!
சென்னை மாநகரையொட்டி அமைந்துள்ள, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதியான பொழிச்சலூர், வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் வெள்ள பாதிப்புகள் கூடுதலாக இருப்பினும், சென்னை விமான நிலையம் - சைதாப்பேட்டை பாலம் தொடங்கி வடசென்னை பாதிப்புகள்வரை ஊடகங்களில் வெளியாகும் நிலையில், சென்னை எல்லையின் தொடக்கத்திலுள்ள பொழிச்சலூர் பாதிப்புகள் ஊடகங்களில்கூட வெளிவராத அவலம் நீடிக்கிறது.
மின்சாரம் - தொலைத் தொடர்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ள அப்பகுதியில், நடக்கும் அவலத்தை - அரசின் அராஜகத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டுமென, அங்கு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் முடிவு செய்தது.
அதன்படி, அங்கு மக்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள், அப்பகுதியின் பாதிப்புகள் யாவும் தொகுக்கப்பட்டு “கவனிக்கப்படாத பொழிச்சலூர் துயரம்” என்ற தலைப்பில் 11 நிமிடக் குறும்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இங்கு வெளியிடுகின்றோம்.
வெள்ள நிவாரணம் கோரிய அப்பகுதி மக்களின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது, இன்னும்கூட அப்பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதாரமற்ற முறையில் இருப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவுகூட அளிக்கப்படாமல் இருப்பது என பல செய்திகளையும் இந்தக் குறும்படம் தாங்கி வருகிறது.
இதை ஊடகங்களுக்கும் அரசுக்கும் கொண்டு செல்ல ஆயிரமாயிரமாய் பகிர்வீர் தோழர்களே!
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க:
044-24742911, 9841949462, 9047162164
Leave a Comment